fbpx

தமிழகத்தில் பறக்கும் படை சோதனை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் கலைக்கப்படுகின்றன – சத்யபிரதா சாகு அறிவிப்பு..!

நாட்டின் 18-வது மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி 21 மாநிலங்கள் உட்பட 102 தொகுதிகளுக்கு நடந்து முடிந்தது. இதில் தமிழத்தில் உள்ள 39 மாவட்டங்களுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. வாக்குப்பதிவு முடிந்துவிட்ட நிலையில், பறக்கும் படை மற்றும் நிலைக்குழுக்கள் சோதனையை வாபஸ் பெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியதாவது, “தமிழகத்தில் பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் கலைக்கப்படுகின்றன. இதுதொடர்பான அறிவுறுத்தலை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. இருப்பினும் தேர்தல் நடத்தை விதிகள் தமிழகத்தில் அமலிலேயே இருக்கும்.

மேலும் பிற மாநிலங்களான கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் வரை அம்மாநிலங்களை ஒட்டியுள்ள தமிழக எல்லை மாவட்டங்களில் மட்டும், பறக்கும் படை சோதனை தொடரும். உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லும் ரொக்கத்துக்கான உச்சவரம்பு ரூ.50 ஆயிரம் என்பதில் மாற்றம் இல்லை” என கூறினார்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, தேர்தல் நடத்தை விதிமீறல்கள் அமலுக்கு வந்தது. இதனையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பறக்கும் படைகள் மற்றும் நிலைக் குழுக்களை தேர்தல் ஆணையம் அமைத்திருந்தது.

அவை, வாகனச் சோதனை மற்றும் புகார்கள் அடிப்படையில் வீடுகள், அலுவலகங்களில் சோதனையில் ஈடுபட்டு வந்தன. இந்த சோதனையில் தமிழகத்தில் ரூ.174.85 கோடி ரொக்கம் மற்றும் ரூ.1,083.77 கோடி மதிப்பிலான தங்கம் உட்பட ரூ.1,301 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Kathir

Next Post

கொண்டாட்டத்தில் மதுரை; இன்று காலை மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்

Sun Apr 21 , 2024
மதுரை சித்திரைத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று காலை 8:35 மணிக்கு மேல் 8:59 மணிக்குள் கோலாகலமாக நடக்கிறது. மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத்திருவிழா ஏப்ரல் 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலை அம்மனும், சுவாமியும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருகின்றனர்.நேற்றுமுன்தினம் அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடந்தது. இதைதொடர்ந்து இன்று திருக்கல்யாணம் நடக்கிறது.இதற்காக ரூ.30 லட்சம் செலவில் மலர்களால் மணப்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. 12 […]

You May Like