fbpx

கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்..!! பின்னணியில் போதைப்பொருள் கும்பல்?

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், போதைப்பொருள் கடத்தல் கும்பலை அம்பலப்படுத்த முயன்றதால் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று உடன் பணிபுரியும் மருத்துவர்கள் சில பகீர் தகவல்களைத் தெரிவித்துள்ளனர்.

மேற்கு வங்கம் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 8-ம் தேதி பணியில் இருந்த முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய குற்றவாளி சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த குற்றத்தில் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதன் விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதற்கிடையே இந்த கொல்கத்தா மருத்துவர் வழக்கில் உடன் பணிபுரியும் மருத்துவர்கள் மருத்துவர்கள் வேறு சில பகீர் கருத்துகளை முன்வைத்துள்ளனர். இது தொடர்பாக அவர் கூறுகையில், “இதைப் பலாத்காரம், கொலை சம்பவமாக மட்டும் இருக்காது என்று நாங்கள் சந்தேகிக்கிறோம்.. அவரை மட்டும் குறிவைத்து இந்தக் குற்றச் சம்பவம் நடந்துள்ளது. அவர் தனியாக இருந்தது குற்றவாளிக்கு எப்படித் தெரிந்தது” என்று கேள்வி எழுப்புகிறார்.

இதேபோல மற்றொரு சக மருத்துவர், “பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பயிற்சி மருத்துவருக்குப் போதை மருந்து கும்பல் குறித்த தகவல்கள் தெரிந்து இருக்கலாம் என்றும் இதன் காரணமாகவே அவர் குறிவைக்கப்பட்டு இருக்கலாம் என்றும் உடன் பணிபுரியும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். பெண் மருத்துவர் ஓய்வெடுக்க செமினார் ஹாலுக்கு சென்ற கொஞ்ச நேரத்தில் அவர் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் கைதாகியுள்ள சஞ்சய் ராய்க்கு மருத்துவர் செமினார் ஹாலில் தனியாகத் தான் இருக்கிறார் என்பது எப்படித் தெரியும் என்று அவர் கேள்வி எழுப்பினார். ஒரு பெரிய கேங் இதன் பின்னணியில் இருக்கலாம் என்றும் சஞ்சய் ராய் வெறும் கருவிதான் என்றும் அவர் கூறுகிறார்.

Read more ; உயர்ந்த ஆளுமை.. பன்முக தன்மை கொண்டவர் கலைஞர் கருணாநிதி..!! – பிரதமர் மோடி புகழாரம்

English Summary

In the case of the rape and murder of a woman doctor in Kolkata, doctors working with her have given some fresh information that she may have been killed because she was trying to expose a drug gang.

Next Post

தென்காசி மாவட்டத்தில் 8 நாட்கள் ஊரடங்கு..!! - ஆட்சியர் உத்தரவு

Sun Aug 18 , 2024
8 days curfew has been issued by district administration in Tenkasi district on the occasion of Ondiveeran Veerawanaka Day and Pulithevan birthday.

You May Like