கொடநாடு கொலை கொள்ளை வழக்கில், கொடநாடு எஸ்டேட்டின் முன்னாள் பங்குதாரரும், ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகனுமான சுதாகரனுக்கு சி.பி.சி.ஐ.டி. சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்துள்ள கோடநாடு பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பங்களாவில் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றிருந்தது. இதில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்ட 11 பேர் ஈடுபட்டது தெரியவந்தது. அதேநேரத்தில் அடுத்த சில நாட்களிலேயே கனகராஜ் திடீரென சாலை விபத்தில் இறந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. பின்னர் கோடநாடு பங்களா சிசிடிவி ஆபரேட்டர் தினேஷும் தமது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கோட நாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை உதகமண்டலம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார் 500க்கும் மேற்பட்ட சாட்சிகளின் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்; 250க்கும் மேற்பட்டோருக்கு சம்மன் அனுப்பி விசாரித்தும் உள்ளனர். இந்த நிலையில் வழக்கில் திடீர் திருப்பமாக ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டார்.
கொடநாடு கொலை கொள்ளை வழக்கில், கொடநாடு எஸ்டேட்டின் முன்னாள் பங்குதாரரும், ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகனுமான சுதாகரனுக்கு சி.பி.சி.ஐ.டி. சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தனிப்படை முன்பு வரும் 27ம் தேதி சுதாகரன் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணையை சிபிசிஐடி தீவிரப்படுத்தியுள்ளது.
யார் இந்த சுதாகரன்? சசிகலாவின் உறவினரான சுதாகாரன் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன். ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவுடன் சேர்ந்து பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் 4 ஆண்டுகள் தண்டனை அனுபவித்தவர். ஒரு காலத்தில் சின்ன எம்ஜிஆர் எனவும் அழைக்கப்பட்டவர்.
Read more: அட்ராசக்க.. தொடர்ந்து சரியும் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.240 குறைவு..!! குஷியில் நகைப் பிரியர்கள்!