fbpx

உஷார்.. கள்ளக்குறிச்சியில் பரவும் எலி காய்ச்சல்!! மிரளும் பொதுமக்கள்.. அறிகுறிகள் என்ன!

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் ஏற்படுத்திய உயிரிழப்புகளில் இருந்தே அம்மாவட்ட மக்கள் இன்னும் முழுமையாக மீளவில்லை. இந்தச் சூழலில் கள்ளக்குறிச்சி மாவட்டம் வசதொரசலூர் என்ற கிராமத்தில் சிலர் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறுமி உள்ளிட்ட 7 பேருக்கு எலிக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் வசதொரசலூர் என்ற கிராமத்தில் சிலருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. காய்ச்சல், வாந்தி, மயக்கம் என்று பெரும் சிரமத்தை எதிர்கொண்ட அவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அறிகுறிகளைப் பார்த்த உடன் அது வழக்கமான காய்ச்சல் இல்லை என்பதைத் தெரிந்து கொண்ட மருத்துவர்கள் உடனடியாக ரத்தப் பரிசோதனை எடுக்க அறிவுறுத்தியுள்ளனர். ரத்தப் பரிசோதனை ரிப்போர்ட்டில் அவர்களுக்கு எளி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் மேல் சிகிச்சைக்காக உடனடியாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அங்கே அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஒரே இடத்தில் ஏழு பேருக்கு எலிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட நிலையில், அந்த பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் ஏற்கனவே மூளையை உண்ணும் அமீபா அலற விட்டுக் கொண்டு இருக்கிறது. இதற்கிடையே தமிழ்நாட்டில் சிலருக்கு இப்போது எலிக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

அறிகுறிகள்: இந்த எலிக் காய்ச்சல் ஏற்படும் போது உடல் வெப்ப நிலை 40 டிகிரியை தாண்டி காய்ச்சல் ஏற்படும். மேலும், தீவிர தலைவலி, ரத்த அழுத்தம் குறைதல், கண் சிவத்தல், குமட்டல் ஆகியவை கூட ஏற்படும். மேலும், ஒரு நாளில் பல முறை வாந்தி, கண் பகுதியில் இருந்து ரத்தக் கசிவும் ஏற்படும். சில நேரம் நிலைமை மோசமானால் மஞ்சள் காமாலை கூட ஏற்படும் ஆபத்து இருக்கிறது.

எலிக் காய்ச்சல் என்றால் என்ன: இந்த எலிக் காய்ச்சல் என்பது ஒரு வகை பாக்டீரியா தொற்றாகும். இது எலிகளில் இருந்து மனிதர்களுக்குப் பரவுகிறது. அதாவது இந்த பாக்டீரியாவால் பாதிக்கப்படும் எலிகள் மனிதர்களைக் கடித்தால் அல்லது அந்த எலிகளின் கழிவுகளை நாம் சுவாசித்தால் கூட இந்த எலிக் காய்ச்சல் ஏற்படும்

English Summary

In the village of Vasathorasalur in Kallakurichi district, some people are suffering from rat fever. 7 people, including a girl, have developed rat fever and there has been a commotion in the area.

Next Post

'பாரிஸ் ஒலிம்பிக் 2024'!. பி.வி.சிந்து, ஷரத் கமல் ஆகியோர் தேசியக் கொடியை ஏந்தி செல்வார்கள்!.

Tue Jul 9 , 2024
Olympics 2024: PV Sindhu, Sharath Kamal to be India's flag bearers, Gagan Narang named Chef-de-Mission

You May Like