விழுப்புரம் மாவட்டத்தில் ஆவின் பாலகத்தில் வாங்கிய குல்பியில் ஈ இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த நபர் ஆவி நிர்வாகத்திடம் முறையீடு செய்தார். சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது . விழுப்புரம் மாவட்டம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களின் ஆவின் பால் நிலையம் விழுப்புரம் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கிறது. இந்தக் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களின் சேர்மனாக திமுக பிரமுகர் தினகரன் இருந்து வருகிறார். இவர் பால் நிலையம் அருகே உள்ள ஆவின் பாலகம் ஒன்றையும் எடுத்து நடத்தி வருகிறார்.
இந்நிலையில் கோடை காலத்தை முன்னிட்டு ஆவினில் சிறப்பு விற்பனையாக குளுகுளு கோடை கொண்டாட்டம் என்ற பெயரில் ஐஸ்கிரீம், பால்கோவா, பால் பாக்கெட், குல்ஃபி ஐஸ் உள்ளிட்டவை விற்கப்பட்டது. ஆவின் பாலகம் என்றாலே தரம் மற்றும் நியாயமான விலை என்பதால் மக்கள் விரும்பி வாங்கி செல்வர். இங்கே விற்பனை செய்யப்படும் பொருட்களும் சுத்தமான பாலில் தயாரிக்கப்படுவதால் சுவையும் நன்றாக இருக்கும். ஏராளமான மக்கள் இந்த பாலகத்திற்கு வந்து ஐஸ்கிரீம் பால்கோவா உள்ளிட்டவற்றை வாங்கி சென்றனர். அப்போது ஒரு நபர் வாங்கிய குல்ஃபி ஐஸில் ஈ இருந்ததாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து அவர் விற்பனையாளரிடம் புகார் அளித்திருக்கிறார். அதற்கு விற்பனையாளர் மிகவும் அலட்சியமாக இதனை எடுத்து போட்டு சாப்பிடுங்கள் என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நபர் அந்த குல்பி ஐசில் இருக்கும் படத்தை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளார். இந்த செய்தி தற்போது வைரலாக இருக்கிறது. முப்பது ரூபாய் கொடுத்து வாங்கிய குல்பி ஐசில் இருந்ததால் கடும் மன உளைச்சலுக்கு உள்ள நார் லாரி ஓட்டுநர்