fbpx

நண்பனின் மனைவியுடன் தகாத உறவு.. இடையூறாக இருந்த கணவன்..!!

தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த கல்லடிப்பட்டி கிராமம் பேருந்து நிறுத்தத்தில் இன்று அதிகாலை இளைஞர் ஒருவரின் உடல் ரத்த வெள்ளத்தில் மண்டை உடைக்கப்பட்டு சிதைக்கப்பட்டு இருந்தது, இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலில் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது இந்த இளைஞர் கணபதிப்பட்டி மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த பழனிசாமி என்பவருடைய மகன் ராஜாராமன் என்பதும் இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகள்கள் ஒரு மகன் மற்றும் மனைவி உள்ளதும் தெரிய வந்தது. உயிரிழந்த ராஜாராமன் கோயம்புத்தூரில் உள்ள ஜவுளி கடையில் வேலை செய்து வருகிறார்.

காவல்துறையினரின் விசாரணையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு, ராஜாராமனின் மனைவி தமிழ் இலக்கியா அரூரில் உள்ள ஒரு தனியார் சலூன் மற்றும் அழகு நிலையத்தில் பணிபுரிந்து வந்ததாகவும் அங்கு, உடன் பணிபுரிந்த சரவணகுமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த பழக்கம் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்துள்ளது. உயிரிழந்த ராஜாராமனுடன் சரவணகுமாரும் நண்பர்கள் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு மது போதையில் இருந்த ராஜாராமனை உடன் இருந்த சரவணகுமார் கல்லால் தலையில் தாக்கி சிதைக்கப்பட்டுள்ளார் என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தமிழ் இலக்கியாவை காவல்துறையினர் மொரப்பூர் காவல் நிலையத்தில் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சரவண குமாரையும் விசாரணைக்கு போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

Read more ; தலைமை செயலகத்தில் உள்ள கட்டிடத்தில் விரிசல்…! அச்சத்தில் வெளியேறிய ஊழியர்கள்..! ஆய்வு செய்த அமைச்சர் ஏ.வ.வேலு..!

English Summary

Improper relationship with friend’s wife. Horrible murder of the disturbing husband.

Next Post

’மச்சான் இவள தட்டித் தூக்குறோம்’..!! நர்சிங் மாணவியுடன் பழகி கர்ப்பமாக்கிய 3 ஆட்டோ ஓட்டுநர்கள்..!! காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி..!!

Thu Oct 24 , 2024
The three have often flirted with the girl. At some point the girl became pregnant.

You May Like