2021-22-ம் நிதியாண்டு முதல் 2026-27-ம் நிதியாண்டு வரை ரூ.10,900 கோடி மதிப்பீட்டில், உணவு பதப்படுத்துதல் தொழில்துறைக்கான உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டம் 2021 மார்ச் 31 அன்று அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது. இந்த திட்டம் மூன்று அம்சங்களைக் கொண்டுள்ளது: முதலாவதாக, 4 உணவு தயாரிப்பு பிரிவுகளில் உற்பத்தியை ஊக்குவித்தல் (சமைக்கத் தயாராக / சாப்பிடத் தயாராக இருக்கும் உணவுகள்; பதப்படுத்தப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகள்; கடல் பொருட்கள்; மற்றும் மொஸரெல்லா சீஸ்),
இரண்டாவதாக, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் புதுமையான / கரிம தயாரிப்புகளை ஊக்குவித்தல், மூன்றாவதாக உலகளாவிய சந்தையில் இந்திய பிராண்டுகளை ஊக்குவிப்பதற்காக வெளிநாடுகளில் பிராண்டிங் மற்றும் சந்தைப்படுத்தலை ஊக்குவித்தல். கூடுதலாக, சிறுதானிய அடிப்படையிலான தயாரிப்புகளை ஊக்குவிப்பதற்கான பி.எல்.ஐ திட்டம் 2022-2023–ம் நிதியாண்டில் ரூ.800 கோடி ஒதுக்கீட்டில் தொடங்கப்பட்டது.
பி.எல்.ஐ பயனாளிகள் இந்த திட்டத்தின் கீழ் ரூ .7,126 கோடி முதலீடு செய்துள்ளதாகவும், 2023 ஏப்ரல்-செப்டம்பர் வரை ரூ .49,825 கோடி விற்பனை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். திட்ட வழிகாட்டுதல்களின்படி, பி.எல்.ஐ பயனாளிகள் ஒரு குறிப்பிட்ட நிதியாண்டிற்கான ஊக்குவிப்பு உரிமைகோரல்களை அடுத்த நிதியாண்டின் டிசம்பர் 31 க்குள் வழங்க வேண்டும்.