போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகைக்கான வருமான உச்சவரப்பு ரூ. 2.5 லட்சத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும்..
பொருளாதார ரீதியாக நலிவடைந்த மாணவர்கள் மத்திய அரசின் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை பெற ஆண்டு மொத்த வருமானம் 8 லட்சத்திற்கும் குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினராக அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கும் இந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் 18 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
மொத்த வருமானம் என்பது பணிக்கான ஊதியம், வேளாண் சார்ந்த வருமானம், தொழில்சார்ந்த வருமானம் உள்ளிட்டவற்றை உள்ளடக்கியது. இதேபோல், போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் பயனாளிகளிள் பெற்றொர் அல்லது காப்பாளரின் வருமானம் ஆண்டுக்கு ரூ. 2.5 லட்சத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும்.