ஆந்திராவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று வெளியிட்டார். நிறைவேற்ற முடியாத எந்தவொரு வாக்குறுதியையும் அளிக்கப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.
‘நவரத்னலு’ என்ற பெயரில் கடந்த 2019ஆம் ஆண்டு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டிருந்த நிலையில், அதில் சிறு சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு இம்முறை ‘நவரத்னலு ப்ளஸ்’ என்ற பெயரில் தேர்தல் அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், முக்கிய வாக்குறுதிகளாக, விவசாயிகளுக்கான வருடாந்திர நிதியுதவியாக வழங்கப்படும் ஊக்கத்தொகை ரூ.13,500இல் இருந்து ரூ.16,000 ஆக உயர்த்தப்படும். பயிர்களுக்கான வட்டியில்லா கடன் வரம்பு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ. 3 லட்சமாக அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கான ‘அம்மா வோடி’ திட்டப் பெண் பயனாளிகளுக்கான ஊக்கத்தொகை ரூ.15,000இல் இருந்து ரூ.17,000 ஆக உயர்த்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. 45 – 60 வயது வரையிலான பெண் பயனாளிகளுக்கான ‘ஒய்எஸ்ஆர் சேயுதா’ நிதியுதவித் திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.3,000 ஆக வழங்கப்பட்டு வந்த நல ஓய்வூதியத் தொகை ரூ.3,500 ஆக உயர்த்தி வழங்கப்படும். அதேபோல, ஆந்திராவில் அமராவதியை போல, விசாகப்பட்டினம், கர்நூல் ஆகிய நகரங்களையும் சேர்த்து மொத்தம் 3 தலைநகரங்கள் உருவாக்கப்படும்” என தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : ’உன்னால குழந்தை பெத்துக்கவே முடியல’..!! ’நீயெல்லாம் பேசுறியா’..? திட்டிய தந்தையை தீர்த்துக் கட்டிய மகன்..!!