fbpx

மாணவர்களே மகிழ்ச்சி…! மாதந்தோறும் தரப்படும் உதவித்தொகை ரூ.31,000 லிருந்து ரூ.37,000 ஆக உயர்வு…!

ஒற்றை பெண் குழந்தைகளின் ஆராய்ச்சி படிப்புக்கான சாவித்ரிபாய் ஜோதிராவ் பூலே உதவித் தொகையும் ஜேஆர்எப் பிரிவுக்கு 37,000 ரூபாயாகவும், எஸ்ஆர்எப் பிரிவுக்கு ரூ.42,000ஆக உயர்த்தி வழங்கப்படும் என பல்கலைக்கழக மானிய குழு தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்; இளநிலை ஆராய்ச்சியாளர்களுக்கு (ஜேஆர்எப்) மாதந்தோறும் தரப்படும் உதவித்தொகை ரூ.31,000 லிருந்து ரூ.37,000 ஆகவும், முதுநிலை ஆராய்ச்சியாளர்களுக்கான உதவித்தொகை ரூ.35,000 லிருந்து ரூ.42,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல, ஒற்றை பெண் குழந்தைகளின் ஆராய்ச்சி படிப்புக்கான சாவித்ரிபாய் ஜோதிராவ் பூலே உதவித் தொகையும் ஜேஆர்எப் பிரிவுக்கு 37,000 ரூபாயாகவும், எஸ்ஆர்எப் பிரிவுக்கு ரூ.42,000ஆக உயர்த்தி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, டாக்டர் டி.எஸ்.கோத்தாரி முதுநிலை உதவித் தொகைத் திட்டத்தில் முதலாம் ஆண்டுக்கு 58,000 ரூபாயும், 2-ம் ஆண்டு 61 ஆயிரம் ரூபாயும், 3-ம் ஆண்டு 67 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் மாதந்தோறும் அளிக்கப்படும். உதவித்தொகையின் முழுமையான விவரங்களை www.ugc.ac.in என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

Vignesh

Next Post

மத்திய அரசின் ரூ.300 சிலிண்டர் மானியம்... உங்கள் வங்கி கணக்கில் பணம் வந்ததை எப்படி பார்ப்பது...?

Sun Oct 22 , 2023
மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தில், பொருளாதாரத்தில் பிந்தங்கிய பெண்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் சிலிண்டருக்கு வழங்கப்படும் மானியம் சமிபத்தில் 200 அதிகரித்தது மத்திய அரசு. அதனைத்தொடர்ந்து, கடந்த வாரம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மேலும் ரூ.100 மானியம் அதிகரிக்கப்பட்டது. இதனால் இத்திட்டத்தில் விநியோகிக்கப்படும் சிலிண்டரில் விலையில் ரூ.300 குறைத்து வழங்கப்படும். உஜ்வாலா திட்டத்தில் 14.2கிலோ சிலிண்டரின் தற்போதைய விலை ரூ.703 ஆக […]

You May Like