fbpx

IND vs ENG 3வது டி20!. 7 ஆண்டுகளுக்குபின் முதல் தோல்வி!. அவுட் ஆன பிறகு கோபத்தை வெளிப்படுத்திய ஹர்திக் பாண்டியா!.

IND vs ENG: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணியின் தொடர்ச்சியான வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு ராஜ்கோட்டில் உள்ள மைதானத்தில் இந்தியாவின் முதல் தோல்வி இதுவாகும். கடைசியாக நவம்பர் 2017 இல் நியூசிலாந்துக்கு எதிராக ராஜ்கோட்டில் நடைபெற்ற டி20 போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. 

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து முதல் இரண்டு டி20 போட்டிகளில் தோல்வி அடைந்த நிலையில் மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்த நிலையில் இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. இதில் பில் சால்ட் 5 ரன்னில் வெளியேறினாலும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கட் அதிரடியான ஆட்டத்தை மேற்கொண்டார். கேப்டன் பட்லர் அவருக்கு பார்ட்னர்ஷிப் கொடுக்க 51 ரன்கள் குவித்த நிலையில் வெளியேறினார். பட்லர் 24 ரன்னில் வெளியேற, அதற்குப் பிறகு இங்கிலாந்து அணியின் விக்கெட் வீழ்ச்சி ஆரம்பித்தது. இதில் ஆல்ரவுண்டர் லிவிங்ஸ்டன் மட்டுமே அதிரடியாக விளையாடி 24 பந்துகளில் 1 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸ் என 43 ரன்கள் குவித்தார். இதனால் இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் குவித்தது. பந்துவீச்சில் அதிகபட்சமாக வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் இந்திய அணி களம் இறங்கியது . இதில் தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் 3 ரன், மற்றொரு தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா 14 பந்துகளில் 24 ரன்கள் குவித்த நிலையில் கார்ஸ் பந்துவீச்சில் வெளியேற, அதற்குப் பிறகு இந்திய அணியின் விக்கெட்டுகள் விழ ஆரம்பித்தது. இதில் கேப்டன் சூரியகுமார் யாதவ் 7 பந்தில் 14 ரன், திலக் வர்மா 14 பந்துகளில் 18 ரன், வாஷிங்டன் சுந்தர் 6 ரன், அக்சார் பட்டேல் 15 ரன்னில் வெளியேறினார்கள். இதில் ஹர்திக் பாண்டியா மட்டுமே நிலைத்து நின்றார். இருப்பினும் ஆட்டத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப அவரது ஸ்ட்ரைக் ரேட் சிறப்பாக அமையவில்லை.

குறிப்பாக ஆட்டத்தின் 17வது ஓவரில் அக்சார் பட்டேல் ஆட்டம் இழந்து வெளியேற, அப்போது களத்தில் இருந்த பாண்டியாவுடன் ஜுரேல் ஜோடி சேர்ந்தார். இக்கட்டான சூழ்நிலையில் இருந்த போது அடித்து ஆட வேண்டிய நிலையில் அந்த ஓவரின் கடைசி பந்தில் ஜூரேல் ரொட்டேட் செய்து சிங்கிள் எடுக்க முயற்சி செய்தபோது ஹர்திக் பாண்டியா அதனை மறுத்து நான்-ஸ்டிக்கர் திசையிலேயே நின்றார். ஆட்டத்தை முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டிய அந்த சமயத்தில் பாண்டியாவின் செயல் ரசிகர்களை சற்று அதிருப்திக்கு உள்ளாக்கியது. இருப்பினும், ஆட்டத்தின் 19வது ஓவரில் ஜேமி ஓவர்டனால் பாண்டியா ஆட்டமிழந்தார். பாண்டியாவும் இறுதியில் 35 பந்துகளில் 40 ரன்னில் வெளியேற இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் குவித்து 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அவுட் ஆனதும் பாண்டியா கோபமாக காணப்பட்டார். திரும்பி நடக்கும்போது தன்னைத் தானே திட்டிக்கொண்டு பேட்டையைத் தூக்கி எறிந்தபடி கோபமாக சென்றார்.

Readmore: 1000 சிவனுக்கு சமம்.. புராணக் கதைகளுக்கு பெயர் பெற்ற சோமேஸ்வரசுவாமி கோவில்..!! எங்க இருக்கு தெரியுமா..?

English Summary

IND vs ENG 3rd T20!. India suffered defeat!. Hardik Pandya expressed anger after being out!.

Kokila

Next Post

குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் நோட்டீஸ் அனுப்பக்கூடாது!. உச்சநீதிமன்றம்!

Wed Jan 29 , 2025
Notices should not be sent to accused persons through WhatsApp! Supreme Court!

You May Like