நேற்று இந்திய சுதந்திர தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
அதனால், நாடு முழுவதும் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால், பாதுகாப்பு பணிகளுக்கு இடையே, ராணுவ வீரர்களும், காவல்துறை அதிகாரிகளும் தங்களுடைய பணிகளுக்கு இடையே சுதந்திர தினத்தை கொண்டாடி இருக்கிறார்கள்.
அந்த வகையில், ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச், ஜம்மு மற்றும் சம்பர் மாவட்ட எல்லை பகுதிகளில், பாகிஸ்தான் ராணுவ வீரர்களுடன், இந்திய ராணுவ மற்றும் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் இனிப்புகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
அதேபோல, ஜம்மு காஷ்மீரின் எல்லை பகுதியில், எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் இணைப்புகளை பரிமாறிக் கொண்டனர். சம்பா மாவட்டத்தில், சம்பா, கதுவா, ஆர்.எஸ்.புரா அக்நூர் போன்ற எல்லை பகுதிகளில், இருநாட்டு வீரர்களும் இனிப்புகளை பரிமாறிக் கொண்டதாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.