ஆதார் அட்டையுடன், வாக்காளர் அடையாள அட்டையை இணைப்பதற்கான கால அவகாசம், 2024 மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணையின்படி வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியானது கடந்த 01.08.2022 முதல் தொடங்கி நாளது வரை நடைடுபற்று வருகிறது. இந்நிலையில், வாக்காளர்கள் எவரேனும் தங்களது அதார் விவரங்களை வாக்காளர் பட்டியலுடன் நாளது வரை இணைக்காமல் இருந்தால், அவ்வாக்காளர்களுக்காக கால அவகாசம் 2024 மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் தாமாக முன்வந்து தங்களுக்கு அருகாமையில் உள்ள வாக்குசாவடி நிலையங்களில் தங்களுடைய ஆதார் மற்றும் வாக்காளர் பதிவு எண் விவரங்களை படிவம் 6B -யில் பூர்த்தி செய்து வாக்குசாவடி நிலைய அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.