fbpx

உலகை வழிநடத்தும் இந்தியா!. வல்லரசு நாடுகளின் பட்டியலில் இடம்பெற முழு தகுதி உள்ளது!. புதின் புகழாரம்!

Putin: பொருளாதார வளர்ச்சியில் உலகை வழிநடத்தும் நாடாக உள்ள இந்தியாவுக்கு, வல்லரசு நாடுகளின் பட்டியலில் இடம்பெற முழு தகுதி உள்ளது என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் புகழாரம் சூட்டியுள்ளார்.

ரஷ்யாவின் சோச்சி நகரில் ‘வால்டாய் டிஸ்கஷன் கிளப்’ என்ற சிந்தனை குழுவின் கூட்டம் நேற்று நடந்தது. இதில், அந்த நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் பேசியதாவது, இந்தியா, 150 கோடி மக்கள் தொகை, உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம், பண்டைய கலாசாரம் மற்றும் எதிர்கால வளர்ச்சிக்கான நல் வாய்ப்புகள் போன்றவற்றை பெற்றுள்ளது. இதன் காரணமாக இந்தியாவை சந்தேகத்திற்கு இடமின்றி உலக வல்லரசுகளின் பட்டியலில் சேர்க்க வேண்டும்.

பொருளாதார வளர்ச்சியில் உலகை வழிநடத்தும் நாடாக இந்தியா உள்ளது. இந்தியா — ரஷ்யா இடையேயான ஒத்துழைப்பு ஒவ்வொரு ஆண்டும் பல மடங்கு அதிகரிக்கிறது. இந்தியாவுடன் அனைத்து வழிகளிலும் ரஷ்யா உறவுகளை மேம்படுத்தி வருகிறது. இருதரப்பு உறவுகளில் எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது.

ரஷ்யாவின் பல வகை ஆயுதங்கள் இந்திய ராணுவத்தில் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றை இணைந்து வடிவமைத்து உள்ளோம். இதற்கு காரணம் இருதரப்பு உறவின் மீதான நம்பிக்கை. பிரம்மோஸ் ஏவுகணை அதற்கு சிறந்த உதாரணம் என்று கூறினார்.

Readmore: இதை மட்டும் பண்ணுங்க!. இல்லைன்னா கேஸ் சிலிண்டர் கிடைக்காது?. நாடு முழுவதும் மத்திய அரசு மெசேஜ்!.

English Summary

India leading the world! It is fully qualified to be included in the list of superpowers! Praise for Putin!

Kokila

Next Post

இன்று முதல் 16-ம்‌ தேதி வரை TNPSC தேர்வு நடைபெறும் என அறிவிப்பு...! 37,808 பேருக்கு அனுமதி

Sat Nov 9 , 2024
Notification that TNPSC exam will be held from today to 16th.

You May Like