fbpx

மிக் ஜாம் போயாச்சு.! அடுத்து வர புயலுக்கும் பேரு வச்சாச்சு.! என்ன பேரு தெரியுமா.?

கடந்த சில தினங்களாக கனமழை மற்றும் புயலால் சென்னை திருவள்ளூர் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியது. 24 மணி நேரத்திற்கும் அதிகமாக தொடர்ந்து பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தற்போது வரை சென்னை மற்றும் அதனை சுற்றி இருக்கும் மாவட்டங்களில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அடுத்து வர இருக்கும் புயல்களுக்கான பெயரை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு இருக்கிறது. இந்த புயலுக்கு மிக்ஜாம் என பெயர் வைத்தது போல் இனி வர இருக்கும் புயல்களுக்கும் பெயரை தயாராக வைத்திருக்கிறது. அடுத்தடுத்து புயல்கள் வருவதால் அவற்றை வேறுபடுத்தி பார்க்கவும் அதன் தாக்கம் மற்றும் தன்மை மக்களுக்கு எளிதில் புரியும் படியும் புயல்களுக்கு பெயர் வைக்கும் பழக்கம் மேலை நாடுகளில் இருந்து வந்தது.

இந்தியாவில் இந்த பழக்கம் 2004 ஆம் ஆண்டில் இருந்து தான் தொடங்கியது. உலக வானிலை மையம் 1950 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இது 6 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. இதில் வட இந்திய பெருங்கடல் மண்டலத்தில் இந்தியா உட்பட 13 நாடுகள் இருக்கின்றன. இதன் தலைமையகம் இந்தியாவில் உள்ளது. இந்தியா மற்றும் இந்த 13 நாடுகளில் ஏற்படும் புயலுக்கு அந்த நாடுகளின் பரிந்துரையின் அடிப்படையில் பெயர் சூட்டப்படுகிறது. அதன்படி அடுத்து வர இருக்கும் புயலுக்கு ஓமன் நாட்டின் பரிந்துரைப்படி ரெமல் என பெயரிடப்பட்டிருக்கிறது. அதற்கு அடுத்து வரும் புயலுக்கு பாகிஸ்தான் பரிந்துரையின் படி அஸ்னா என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

Next Post

சென்னையில் 17 பேர் பலி!… மிக்ஜாம் புயலின் கோரதாண்டவம்!… மாநகர காவல்துறை தகவல்!

Wed Dec 6 , 2023
சென்னையை புரட்டி எடுத்த பேய் மழை, வெள்ளத்தில் சிக்கி இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளதாக மாநகர காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக, சிந்தாதிரிப்பேட்டை, வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. தாழ்வான பகுதிகளில் சிக்கி தவிப்போரை பேரிடர் மீட்பு படையினரும், காவல் துறையினரும் ரப்பர் படகு வாயிலாக மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்து வருகின்றனர். அதேபோல, 69 இடங்களில் […]

You May Like