fbpx

சதமடித்த இந்தியா!… ஆசிய விளையாட்டுப்போட்டியில் வரலாற்று சாதனை!

ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் முதன்முறையாக 100 பதக்கங்களை வென்று புதிய மைல்கல்லை எட்டி இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது.

சீனாவில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நாளை (அக். 8) வரை நடைபெறவிருக்கிறது. இதில் இந்தியா உள்பட 45 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்தியா சார்பில் மட்டும் 40 விதமான விளையாட்டுகளில் 650 க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் இந்தத் தொடரில் பங்கேற்றனர். தொடக்கத்திலிருந்தே சிறப்பாக ஆடிய இந்திய வீரர் வீராங்கனைகள் நேற்று வரை 22 தங்கம், 34 வெள்ளி, 39 வெண்கலம் என மொத்தம் 95 பதக்கங்களை வெல்ல இந்தியா பதக்க பட்டியலில் 4 ஆம் இடத்தில் இருந்துவருகிறது. ஆசிய விளையாட்டு போட்டி வரலாற்றில் முதல் முறையாக இந்தியா 100 பதக்கங்களை வெல்லுமா? என்கிற எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்திருந்தது.

இந்நிலையில் 13வது நாள் போட்டிகளின் முடிவில் ஹாக்கி ஆண்கள் இறுதிப்போட்டியில் 5-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி இந்தியா தங்கப்பதக்கம் வென்று அசத்தியது. பிரிட்ஜி ஆண்கள் குழு இறுதிப்போட்டியில் 17-12 என்ற புள்ளி கணக்கில் ஹாங்காங் அணியிடம் தோல்வியடைந்து இருந்தாலும் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது. மல்யுத்தம் ஆண்கள் பிரிஸ்டைல் 57 கிலோ வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் இந்திய வீரர் ஆமென் 11-0 என்ற புள்ளி கணக்கில் சீன வீரரை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றார். மல்யுத்தம் பெண்கள் பிரிஸ்டைல் 62 கிலோ பிரிவில் இந்திய வீராங்கனை சோனம் வெண்கலப்பதக்கம் வென்றார்.

வில்வித்தை ஆண்கள் ரிகர்வி குழு இறுதிப்போட்டியில் தென்கொரியாவிடம் தோல்வியடைந்த இந்தியா வெள்ளிப்பதக்கம் வென்றது. ஆசிய விளையாட்டு பெண்கள் செபக் டக்ரா போட்டியில் இந்தியா வெண்கல பதக்கம் வென்றது. இதனடிப்படையில், ஆசிய விளையாட்டு போட்டியில் 100 பதக்கங்கள் எனும் மைல்கல்லை எட்டி இந்தியா சாதனையைப் படைத்திருக்கிறது. 95 பதக்கங்களை வென்றிருக்கும் இந்தியா, 9 பதக்கங்களை ஏற்கனவே உறுதிசெய்துவிட்டது. இதனால் 100 பதக்கங்களை இந்தியா கடப்பது என்பது உறுதியாகியுள்ளது. நீரஜ் சோப்ரா, ஜோதி யாராஜி, சுனில் குமார், ரோஷிபினா, இந்திய மகளிர் கிரிக்கெட் அணி என பலருமே இந்தியாவின் பதக்கக் குவிப்புக்கு காரணமாக இருந்தனர்.

இதற்கு முன் 2018 ஆசியப்போட்டியில் இந்தியா 70 பதக்கங்களை வென்றிருந்தது. ஆசியப்போட்டிகளின் வரலாற்றில் ஒரு தொடரில் இந்தியா வென்ற அதிக பதக்கங்கள் அதுதான். இந்த முறை அந்த எண்ணிக்கையை தாண்டி இந்திய அணி வென்றதோடு மட்டுமல்லாமல் 100 பதக்கங்கள் என்ற புதிய தடத்தையும் பதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Kokila

Next Post

மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு...! மாதம் ரூ.40,000 வரை ஊதியம்...! உடனே விண்ணப்பிக்கவும்...!

Sat Oct 7 , 2023
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Probationary Engineer, Probationary Officer (HR) & Probationary Accounts Officer பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு என 232 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் B.E B.Sc Engineering Graduate from AICTE approved […]

You May Like