fbpx

‘திமுக – 39, பாஜக – 0’ ; வெளியான தேர்தல் கருத்துக்கணிப்பு.!

2024 ஆம் வருடத்திற்கான பொதுத்தேர்தல் வருகின்ற ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. பொதுத் தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் பணிகள் மும்முறமாக நடைபெற்று வருகிறது. கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி நான் இருக்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்து இருந்தார். மேலும் பாஜக தனியாக 370 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும் ஆருடம் கூறினார். இந்நிலையில் 2024ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் கருத்துக் கணிப்புகள் வெளியாகி இருக்கிறது.

இந்தியா டுடே சி-ஓட்டர் கருத்துக்கணிப்புகள் இன்று வெளியானது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளை திமுக மற்றும் இந்தியா கூட்டணி கைப்பற்றும் என தெரிவித்துள்ளது. மேலும் திமுகவிற்கு 47 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்றும் அந்த கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் கேரளாவில் பாஜக 1 தொகுதியை கூட கைப்பற்றாது என இந்தியா டுடே கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி இருக்கிறது. கேரளாவின் 20 பாராளுமன்ற தொகுதியையும் இந்தியா கூட்டணி கைப்பற்றும் எனவும் தெரிவித்துள்ளது.

Next Post

நெருக்கடியில் இருந்த பொருளாதாரம், 'UPA' விட்டு சென்ற சவால்களை முறியடித்த 'NDA' | வெள்ளை அறிக்கையின் 15 முக்கிய அம்சங்கள்.!

Thu Feb 8 , 2024
இந்திய பொருளாதார நிலை குறித்த வெள்ளை அறிக்கை பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி பாராளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது காங்கிரஸ் தலைமையிலான UPA அரசாங்கத்தின் 10 ஆண்டுகளின் பொருளாதாரச் செயல்பாடுகளை BJP தலைமையிலான NDA அரசாங்கத்தின் 10 ஆண்டுகளுடன் ஒப்பிடும் வகையில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். இது தொடர்பான வெள்ளை அறிக்கை இன்று […]

You May Like