இந்திய எஃகு அலுமினிய பொருட்களுக்கு சென்ற 2018ம் வருடம் முறையே 25% 10% என இறக்குமதி வரியை விதித்தது அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆப்பில், போரிக் அமிலம், பாதாம் போன்ற 28 அமெரிக்க பொருட்களுக்கு இறக்குமதி வரியை விதித்தது.
இந்த நிலையில் அமெரிக்காவில் பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணம் மேற்கொண்டு இருக்கின்ற நிலையில், வர்த்தக பிரச்சனைகளுக்கு தீர்வு காண 2 நாடுகளுக்கும் இடையில் ஒப்புதல் ஏற்பட்டுள்ளது இது குறித்து அமெரிக்க வர்த்தக பிரதிநிதி கேத்தரின் டாய் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் உலக வர்த்தக அமைப்பில் நிலுவையில் இருக்கின்ற 6 வழக்குகளை முடித்துக் கொள்வதற்கு இந்தியாவும் அமெரிக்காவும் ஒப்புதல் வழங்கி உள்ளனர். அமெரிக்கா பொருட்கள் மீது விரிக்கப்பட்ட இறக்குமதி வரியை ரத்து செய்வதற்கு இந்தியாவில் ஒப்புதல் வழங்கி உள்ளது.
இந்த முடிவானது அமெரிக்க வேளாண் பொருட்களுக்கான சந்தையையும் மேலும் அதிகரிக்க ஒரு வாய்ப்பாக இருக்கும். இரு தரப்பு பொருளாதார ஒத்துழைப்பையும் இந்த நடவடிக்கை மேலும் வலுவாக்கும். 2️ நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவை வலுப்படுத்துவது குறித்து வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயலுடன் இணைந்து தொடர்ந்து செயல்பட இருக்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
பரஸ்பரம் பலன் வழங்கும் இது குறித்து மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்ததாவது, இது மிகப்பெரும் வெற்றி இந்த நடவடிக்கை இரு நாடுகளுக்கும் பரஸ்பரம் பலனை வழங்கும். தற்சமயம் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான உலக வர்த்தக அமைப்பில் எந்த வர்த்தக மோதலும் கிடையாது. வர்த்தக பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காண முதல்முறையாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. பண்ணை பொருட்கள் குறித்த பிரச்சனைக்கு இந்த வருடம் இறுதிக்குள் தீர்வு காணப்படும் என்று தெரிவித்தார்.
வர்த்தகப் பிரச்சனை குறித்து உலக வர்த்தக அமைப்பில் இந்தியா அமெரிக்கா சார்பாக தரம் மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளனர். வர்த்தக பிரச்சனை உண்டாகும் நாடுகள் தங்களுக்குள் பேச்சு வார்த்தை மூலமாக தீர்வு காண தங்களுக்கு இடையே பேச்சுவார்த்தையின் மூலமாக தீர்வு காண்பதற்கு சர்வதேச சட்டங்கள் வழி செய்கின்றனர். அத்தகைய அமைதி பேச்சுவார்த்தை தொடர்பாக உலக வர்த்தக அமைப்புக்கு சம்பந்தப்பட்ட நாடுகள் தகவல் கொடுத்தால் போதுமானது என்று வர்த்தக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்