Scotch: 2024 லண்டன் ஸ்பிரிட்ஸ் போட்டியில் சிறந்த சிங்கிள் மால்ட் விஸ்கி பட்டத்தை இந்திய விஸ்கி தட்டிச் சென்றது. காட்அவான் செஞ்சுரி என்ற இந்திய தயாரிப்பு சிங்கிள் மால்ட் விஸ்கி அதன் சிறப்பான மற்றும் தனித்துவமான தரத்தால் நீதிபதிகளை கவர்ந்தது. மேலும் 96 புள்ளிகளை பெற்று Scotch தயாரிப்பு விஸ்கிகளையும் தோற்கடித்திருக்கிறது.
லண்டன் ஸ்பிரிட்ஸ் போட்டியின் நீதிபதிகள் மற்றும் பங்கேற்பாளர்களின் கூற்றுப்படி காட்அவான் செஞ்சுரி விஸ்கி டிராபிகல் வாசனையுடன் மென்மையான சுவை ஆகியவற்றால் அனைவரையும் கவர்ந்தது. கேரமல், கரி, இலவங்கப்பட்டை மற்றும் சோம்பு ஆகியவற்றின் நுட்பமான வாசனை மற்றும் சுவை நாக்கிற்கு தித்திப்பை கொண்டு வருகிறது. மேலும் இதை குடிப்பவர்களுக்கு நல்ல ஒரு அனுபவத்தை கொடுக்கிறது.
டியாஜியோ இந்தியா என்ற நிறுவனம்தான் காட்அவான் விஸ்கியை தயார் செய்கிறது. தங்களது தரமான விஸ்கி தயார் செய்யப்படும் விதம் குறித்து டியாஜியோ இந்தியா விளக்க ஒலித்து இருக்கிறது. அதன்படி 100°Fக்கும் அதிகமான வெப்பத்தில் குறைவான தண்ணீருடன் ஆறு வரிசைகளில் பார்லியுடன் இந்திய தாவரங்களிலிருந்து எடுக்கப்பட்ட சிறந்த வாசனை பொருட்களை கலப்பதன் மூலம் சிறப்பான விஸ்கி தயார் செய்யப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
போட்டியில் காட்அவானுக்கு கிடைத்த பல அங்கீகாரங்களில் இதுவும் ஒன்று. காட்அவான் சிங்கிள் மால்ட் ரிச் மற்றும் ரவுண்டட் ஆர்ட்டிசன் விஸ்கி மற்றும் காட்அவான் சிங்கிள் மால்ட் ஃப்ரூட் மற்றும் ஸ்பைஸ் ஆர்ட்டிசன் விஸ்கி ஆகிய இரண்டும் தங்கப் பதக்கங்களைப் பெற்றன. பிரீமியம் இந்திய சிங்கிள் மால்ட் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் காட்அவானின் நிலையை இந்த ஈர்க்கக்கூடிய காட்சி உறுதிப்படுத்துகிறது.
லண்டன் ஸ்பிரிட்ஸ் போட்டி மிகவும் மரியாதைக்குரிய நிகழ்வாகும். இந்தப் போட்டியில் வழங்கப்படும் தீர்ப்பு கடுமையான சோதனைகளுக்குப் பிறகு வழங்கப்படுவதால் உயர்ந்த அங்கீகாரம் உடையதாக கருதப்படுகிறது.தரம், மதிப்பு மற்றும் பேக்கேஜிங் உள்ளிட்ட காரணிகளின் கலவையின் அடிப்படையில் லிக்கர்கள் மதிப்பீடு செய்யப்படுகின்றன. காட்அவான் செஞ்சுரியின் வெற்றியானது, பாரம்பரிய ஸ்காட்ச் சிங்கிள் மால்ட்களில் இருந்து வேறுபட்ட தனித்துவமான தன்மையை வழங்கும், அதன் விதிவிலக்கான சுவை சுயவிவரத்தை எடுத்துக்காட்டுகிறது.