fbpx

லெபானானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய கால்பந்து அணி..!

கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் SAFF சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த 3 வாரங்களாக நடைபெற்று வருகிறது. இதில், நேற்று இரவு நடந்த அரையிறுதி போட்டியில் லெபனான் மற்றும் இந்திய அணிகள் நேருக்கு நேர் மோதின.போட்டி தொடங்கியது முதலே இந்தியா- லெபனான் அணிகள் எதிரணியை கோல் அடிக்க விடாமல் தடுப்பாட்டத்தில் விளையாடியது. நிர்ணயிக்கப்பட்ட நேரம் வரை இரு அணிகளாலும் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. அதன் பிறகு ஆட்டம் கூடுதல் நேரத்துக்கு சென்றது, ஆனால் கூடுதல் நேரத்திலும் இரு அணிகளாலும் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. இதையடுத்து இந்த போட்டியானது பெனால்டி ஷூட் அவுட்டில் முடிவு செய்யப்பட்டது.

கிடைத்த முதல் வாய்ப்பிலேயே இந்திய அணிக்கு கேப்டன் சுனில் சேத்ரி முதல் கோலை அடித்தார். அதனை தொடர்ந்து பெனால்டி முறையில் இந்திய அணி கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் கோல்களாக மாற்றி அசத்தியது. பெனால்டி ஷூட் அவுட்டில் இந்தியா 4-1 என்ற கோல் கணக்கில் லெபனானை வீழ்த்தியது. இதன் மூலம் இந்திய கால்பந்து அணி SAFF சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. அடுத்ததாக SAFF சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் இந்தியா அணி குவைத் அணியை எதிர்கொள்கிறது. முதல் அரையிறுதி ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி குவைத் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

Maha

Next Post

குழந்தைகள் அவர்களின் வயதுக்கு ஏற்ப கவலைப்படுவார்கள், தெரியுமா?

Sun Jul 2 , 2023
கவலை, பயம் மற்றும் மனச்சோர்வு என்பது குழந்தைகளுக்கும் உண்டு. அது தெரியாமலேயே பெற்றோர்களாகிய நாம் குழந்தைகளிடம் நடந்து கொள்வது உண்டு. நாம் குழந்தைகளுக்கு கற்பிக்கக் கூடிய முக்கியமான திறன்களில் ஒன்று கவலையை எப்படி கையாள்வது. கவலை அவர்களின் மன நலத்தை மட்டுமல்ல அவர்களின் உடல் நலத்தையும் பெரிய அளவில் பாதிக்கிறது. எனவே குழந்தைகளின் வயதுக்கு ஏற்ப அவர்கள் எந்த மாதிரியான விஷயங்களில் கவலைப்படுகிறார்கள் என்பதை பெற்றோர்களாகிய நாம் அறிந்து வைத்திருப்பது […]

You May Like