fbpx

வானிலை மையம் புதிய அப்டேட்…! வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு பகுதி..!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை மறுநாள் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவாகவுள்ள ‘மிக்ஜம்’ புயல், வடமேற்கு திசையில் நகர்ந்து, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர பகுதியை நோக்கி வரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

Vignesh

Next Post

’அதிகாரத்தில் இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டம்’..!! ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு..!!

Fri Dec 1 , 2023
திருச்சியைச் சேர்ந்த மங்களம் என்பவர், சென்னை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “லால்குடி வட்டம் புஞ்சைசங்கேந்தி கிராமத்தில் உள்ள எனது நிலத்தில் ராஜா என்பவர் சட்டவிரோதமாக கிராவல் மண் எடுத்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. திருச்சி ஆட்சியர் தாக்கல் செய்த பதில் மனுவில், “புஞ்சைசங்கேந்தி கிராமத்தில் 6 […]

You May Like