fbpx

#RainAlert: அடுத்த 4 நாட்களுக்கு கனமழை தொடரும் என அறிவிப்பு…! எங்கெங்கு தெரியுமா…?

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் வரும் 14- ம் தேதி முதல் 16-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 முதல் 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

இன்று குமரிக்கடல் பகுதிகள், கேரள கடலோர பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

2 நிமிடத்தில் e- Pan கார்டு...! நீங்களே ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்...! முழு விவரம் இதோ...!

Sun Nov 13 , 2022
ஆன்லைன் மூலம் இ-பான் கார்டை பதிவிறக்கம் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்… பான் கார்டு அனைத்திற்கும் முக்கியமான ஆவணமாக இருந்து வருகிறது. காரணம் அதை பயன்படுத்தாமல் எந்த நிதி பரிவர்த்தனையும் நடக்காது. பான் கார்டு இல்லாமல், வங்கி கணக்கைத் தொடங்க முடியாது, நிதி முதலீடு செய்வதில் தொடங்கி தற்பொழுது அனைத்திற்கும் பான் அவசியம், ஒருவர் பான் கார்டை தொலைத்து விட்டால் பல சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். ஆனால் தற்பொழுது, e-PAN […]
பான் கார்டு கட்டுப்பாடுகளில் தளர்வுகள்..? பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியாகும் முக்கிய அறிவிப்பு..!!

You May Like