இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆட்சேர்ப்பு அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
பணியின் விவரங்கள் : இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் நிர்வாகம் அல்லாத கிரேடு 1 கீழ் ஜூனியர் ஆப்ரேட்டர் காலிப்பணியிடங்கள் தேசிய அளவில் நிரப்பப்படுகிறது. இதில் தமிழ்நாடு உட்பட, ஹாரியானா, இமாச்சல் பிரதேசம், ஜம்மு மற்றும் காஸ்மீர், பஞ்சாப், லாடாக், உத்தர பிரதேசம், அருணாசல பிரதேசம், அச்சாம், உத்தரகாண்ட், பீகார், நாகலாந்து, மேற்கு வங்காளம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, கேரளா, பாண்டிசேரி மற்றும் தெலங்கானா என 215 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் தமிழ்நாட்டில் 13 காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி :
ஜூனியர் ஆப்ரேட்டர் பதவி : 10-ம் வகுப்பு தேர்ச்சிக்கு பின்னர் ஐடிஐ-யில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எலெக்ட்ரிக் மெக்கானிக், இண்ஸ்ரூமெண்ட் மெக்கானிக், இண்ஸ்ரூமெண்ட் மெக்கானிக், எலெக்ட்ரிஷன், மெக்கானிக்ஸ், மெக்கானிக் உடன் ஆப்ரேட்டர் எலெக்ட்ரானிக்ஸ், வயர்மேன், மெக்கானிக் தொழிற்சாலை எலெக்ட்ரானிக் மற்றும் தகவல் தொடர்பியல் ஆகியவற்றில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 1 வருட பணி அனுபவம் தேவை.
ஜூனியர் அட்டெண்டண்ட் பதவி : 12-ம் வகுப்பில் 40 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணி அனுபவம் அவசியமில்லை.
ஜூனியர் தொழில் அட்டெண்டண்ட் பதவி : ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டப்படிப்பில் 45 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். MS Word, Excel & Power Point உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். மேலும் தட்டச்சு வேகம் அவசியம். மேலும், 1 ஆண்டு அனுபவம் தேவை.
சம்பள விவரம்
- ஜூனியர் ஆப்ரேட்டர் பதவிக்கு ரூ.23,000 முதல் ரூ.78,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
- ஜூனியர் அட்டெண்டண்ட் பதவிக்கு ரூ.23,000 முதல் ரூ.78,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
- ஜூனியர் தொழில் அட்டெண்டண்ட் பதவிக்கு ரூ.25,000 முதல் ரூ.1,05,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை
ஜூனியர் ஆப்ரேட்டர் மற்றும் ஜூனியர் அட்டெண்டண்ட் பதவிக்கு பதவிக்கு கணினி வழி தேர்வு மற்றும் திறன்/உடற்தகுதி தேர்வு நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு பணி நியமனம் அளிக்கப்படும். ஜூனியர் தொழில் அட்டெண்டண்ட் பதவிக்கு கணினி வழி தேர்வு மற்றும் கணினி திறன் தேர்வு நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு பணி நியமனம் அளிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் உள்ள இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://iocl.com/latest-job-opening என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.300 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பக் கட்டனம் செலுத்த வேண்டும்.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் நிர்வாகம் அல்லாத பிரிவில் இருக்கும் இப்பணியிடங்களுக்கு ஆர்வமுள்ளவர்கள் உடனே ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க தொடக்கலாம். 12-ம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு முடித்த மாற்றுத்திறனாளிகள் மத்திய அரசின் இந்த வேலைவாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.
Read more : இந்த உணவுகளில் தக்காளி சேர்க்கவே கூடாது.. இல்லனா சிக்கல் தான்..!!