பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில், தங்களின் வாழ்க்கைத் தரம் உயரும் என்ற நம்பிக்கையை பெரும்பான்மையான இந்தியர்கள் இழந்துள்ளதாக C-VOTER நடத்திய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. உயராத சம்பளம், அன்றாட செலவுகள் அதிகரிப்பு ஆகியவை எதிர்கால வாய்ப்புகளை மங்கச் செய்வதாக நடுத்தர மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நாட்டில் பணவீக்கம் இன்னும் கட்டுப்படுத்தப்படவில்லை எனவும், இவர் பதவிக்கு வந்த நாளில் இருந்து விலைவாசி ஏறிக்கொண்டே செல்வதாகவும் மக்கள் குற்றச்சாட்டு.
நரேந்திர மோதி இந்திய பிரதமராக 11 ஆண்டுகள் நிறைவடைய உள்ளன. அவர் கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதம் முதன்முறையாக பதவியேற்றார். காங்கிரஸை தவிர்த்த வேறு கட்சி ஒன்று மத்தியில் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது அதுவே முதன்முறை. அதேபோல முதன்முறையாகக் காங்கிரஸ் பலத்த அடியையும் சந்தித்தது. தனது முதல் பதவிக் காலத்தில், மேக் இன் இந்தியா மற்றும் ஸ்வச் பாரத் என்ற பெரும் திட்டங்களை அறிவித்திருந்தார் பிரதமர் மோடி.
வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்து உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை பெருக்குவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம். அதேபோல இந்த திட்டத்தின் மூலம் பல்வேறு துறைகளில் வெளிநாட்டு நிறுவனங்கள் நேரடியாக முதலீடு செய்ய அரசு கதவுகளை திறந்தது. இந்த நிலையில் பிரதமர் மோடியின் ஆட்சி குறித்து C-Voters நிறுவனம் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது.