fbpx

இந்திய பிரதமர் நரேந்திர மோடி “மிகவும் புத்திசாலி”…, பாராட்டி தள்ளிய ரஷ்ய அதிபர்..! காரணம் என்ன..?

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பிரதமர் நரேந்திர மோடியை “மிகவும் புத்திசாலி” என்றும், அவரது தலைமையின் கீழ் இந்தியாவின் குறிப்பிடத்தக்க வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை பாராட்டியதாகவும் ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிதி பாதுகாப்பு மற்றும் சைபர் கிரைமுக்கு எதிரான போராட்டத்தில் ரஷ்யா மற்றும் இந்தியா இடையே மேம்பட்ட ஒத்துழைப்புக்கான நம்பிக்கையை புடின் வெளிப்படுத்தினார். இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரஷ்யா அதிபர் புதின், “பிரதமர் மோடியுடன் நாங்கள் நல்ல அரசியல் உறவைப் பகிர்ந்து கொள்கிறோம், அவர் மிகவும் புத்திசாலி. மேலும் அவரது தலைமையில் இந்தியா வளர்ச்சியில் பெரும் முன்னேற்றம் அடைந்து வருகிறது. இந்த நிகழ்ச்சி நிரலில் பணியாற்ற இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளின் ஆர்வத்தை இது முழுமையாக பூர்த்தி செய்கிறது.” என்று கூறினார்.

இந்தியாவில் நடந்த G20 உச்சிமாநாட்டில், ரஷ்யா மீது குற்றம் சுமத்தாமல் நடந்து வரும் உக்ரைன் மோதலில் அமைதிக்கு அழைப்பு விடுத்த புது தில்லி பிரகடனம் சமீபத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து ரஷ்யா அதிபர் புதின் இந்த கருத்துக்கள் தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

8வது கிழக்குப் பொருளாதார மன்றத்தில் (EEF) முந்தைய உரையில், பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்குவித்ததையும் புடின் பாராட்டினார். மேலும் உள்நாட்டு உற்பத்தியில் இந்தியாவின் முயற்சிகளைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இது குறித்து அவர் கூறுகையில் “இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வாகனங்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டில் அவர்கள் கவனம் செலுத்துகிறார்கள். மேக் இன் இந்தியா திட்டத்தை விளம்பரப்படுத்துவதில் பிரதமர் மோடி சரியானதைச் செய்கிறார் என்று நான் நினைக்கிறேன். அவர் சொல்வது சரிதான்” என்று புடின் கூறினார்.

Kathir

Next Post

சிக்கிம் வெள்ள பாதிப்பு...! 23 ராணுவ வீரர்கள் உட்பட 82 பேர் மாயம்...! 5 பேர் உடல் சடலமாக மீட்பு...!

Thu Oct 5 , 2023
சிக்கிம் மாநிலத்தின் வடக்குப் பகுதியில் லோனக் என்னும் மிக பெரிய ஏரி உள்ளது . இந்தப் பகுதியில் நேற்று நள்ளிரவில் மேகவெடிப்பு காரணமாக டீஸ்டா ஆற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் ராணுவ வீரர்கள்மாயமாகினர். அவர்களைத் தேடும் பணி தொடரும் சூழலில் இதுவரை 5 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 10 பேர் உயிரிழந்துள்ளனர், 23 ராணுவ வீரர்கள் உட்பட 82 பேர் காணாமல் போயுள்ளனர். செவ்வாய்க்கிழமை இரவு திடீரென ஆற்றில் […]

You May Like