fbpx

அதிரடி…! ரயிலில் இனி பாடல் இசைக்க தடை…! புதிய விதிகளை அறிவித்த இந்திய ரயில்வே…!

இரவில் பயணிக்கும் பயணிகளுக்கு இந்திய ரயில்வே புதிய விதிகளை அறிவித்துள்ளது. மற்ற பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு இந்த விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

ரயில்வே வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களின்படி, அந்தந்த இருக்கைகள், பெட்டிகளில் உள்ள பயணிகள் யாரும் இயர்போன் இல்லாமல் உரத்த குரலில் மொபைலில் பேசவோ அல்லது அதிக ஒலியில் இசையைக் கேட்கவோ கூடாது. இந்திய ரயில்வேயில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். எனவே, ஒவ்வொரு பயணிகளும் சிறந்த பயண அனுபவத்தைப் பெறுவதற்கும், ரயில் சேவைகள் சிறப்பாகச் செயல்படுவதற்கும் இந்த விதிகள் அவசியம்.

இருக்கையிலோ, பெட்டியிலோ அல்லது கோச்சிலோ எந்தப் பயணியும் உரத்த குரலில் மொபைலில் பேச கூடாது. இயர்போன் இல்லாமல் அதிக சத்தத்துடன் எந்தப் பயணியும் பாடல் கேட்க கூடாது. இரவு விளக்கு தவிர, 10 மணிக்குப் மேல் எந்தப் பயணிகளும் விளக்குகளை எரிய வைக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். புதிய விதிகளை மீறினால் பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

சென்னையில் மீண்டும் தனியார் பேருந்துகள் சேவை?... ஒப்பந்த அடிப்படையில் அனுமதி கொடுக்க முடிவு!...

Mon Mar 6 , 2023
சென்னையில் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மற்றும் மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு ஏற்பட்டு வரும் செலவுகளைக் குறைக்கத் தனியார் பேருந்துகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட உள்ளது. சென்னை மாநகர பேருந்து கழக அதிகாரிகளிடம் விசாரித்த போது, சென்னையில் மொத்தம் 1000 பேருந்துகளைத் தனியார் சேவையாக அறிமுகம் செய்யப்பட உள்ளது.இந்த பேருந்துகள் ஒப்பந்த அடிப்படையில் அறிமுகம் செய்யப்படும் எனவும், கிலோ மீட்டர் கணக்கில் அவர்களுக்குக் கட்டணம் பகிரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த திட்டம் உலக […]

You May Like