fbpx

நீங்கள் ரயில் பயணத்தை விரும்புபவரா அப்படி என்றால் இனி வெளியூர் சென்றால் தங்குவதற்கு அறை தேடி அலைய வேண்டாம்…..! ரயில்வே துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு அதுவும் இவ்வளவு குறைந்த கட்டணத்திலா மகிழ்ச்சியில் பயணிகள்…..!

ஐ ஆர் சி டி சி ஓய்வு அரை முன்பதிவு இந்திய ரயில் பயணிகளுக்கு பல வசதிகள் வழங்குகிறது இதன் காரணமாக பொதுமக்களின் பயணம் சுகமாக இருக்கிறது. பண்டிகை மற்றும் கோடை காலங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு பயணிகளுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது.

அதோடு பயணச்சீட்டு முன்பதிவு மற்றும் மற்ற வசதிகள் அவ்வப்போது செய்து தரப்படுகிறது. ரயில்வேயின் பல வசதிகள் தொடர்பாக பயணிகளுக்கு தெரிவதில்லை. அப்படிப்பட்ட ஒரு வசதி பற்றி தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

ரயில்வேயில் பயணம் செய்தால் நீங்கள் ரயில் நிலையத்தில் தங்க வேண்டும் என விருப்பம் கொண்டால் ரயில் நிலையத்திலேயே உங்களுக்கு ஒரு அறை கிடைக்கும். நீங்கள் எந்த விடுதிக்கும் எங்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்த அறைகள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் எவ்வளவு ரூபாய் மற்றும் எப்படி டிக்கெட்டுகளை முன் பதிவு செய்யலாம் என்பதை தற்போது நாம் தெரிந்துகொள்வோம்.

அதாவது ரயில் நிலையத்தில் பயணிகள் தங்குவதற்கு சொகுசு விடுதி போன்ற அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இது ஒரு ஏசி அறை மற்றும் படுக்கை மற்றும் அறைக்கு தேவையான அனைத்து பொருட்களும் இருக்கின்ற அடையாளம் ஒரே இரவில் அறையை முன் பதிவு செய்ய 100 ரூபாய் முதல் 700 ரூபாய் வரையில் செலுத்த வேண்டி வரும்.

ரயில் நிலையத்தில் ஹோட்டல் போன்ற அறையை முன் பதிவு செய்ய விரும்பினால் இங்கே குறிப்பிடப்பட்டிருக்கின்ற சில செயல்முறைகளை நீங்கள் பின்பற்ற வேண்டும்.

அதாவது முதலில் உங்களுடைய ஐஆர்சிடிசி கணக்கை திறக்க வேண்டும். தற்போது உள் நுழைந்து முன்பதிவுக்கு செல்ல வேண்டும் உங்களுடைய பயண சீட்டு முன்பதிவின் கீழே ஓய்வு அறை விருப்பம் என தோன்றும். அதை கிளிக் செய்த பிறகு அறையை முன் பதிவு செய்வதற்கான விருப்பத்தை நீங்கள் காணலாம்.

பி என் ஆர் எண்ணை உள்ளிட தேவையில்லை. ஆனால் சில தனிப்பட்ட தகவல்கள் மற்றும் பயண தகவல்கள் நிரப்பப்பட வேண்டும். பயணிகளின் வசதிக்காக ரயில்வே தற்போது கோடைகால சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post

ஒரே மாதத்தில் 65 லட்சமா..? வாட்ஸ் அப் பயனர்களே உஷார்..!! திடீர் முடிவுக்கு என்ன காரணம்..?

Mon Jul 3 , 2023
புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021க்கு இணங்க, மே மாதத்தில் இந்தியாவில் 65 லட்சத்துக்கும் அதிகமான கணக்குகளை மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ் அப் தடை செய்துள்ளது. மே 1 மற்றும் மே 31-க்கு இடையில் 6,508,000 வாட்ஸ்அப் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன. மேலும், 2,420,700 கணக்குகள் நாட்டில் உள்ள பயனர்களிடமிருந்து எந்த அறிக்கையும் வருவதற்கு முன்பே தடை செய்யப்பட்டுள்ளன. ஏப்ரல் மாதத்தில், இந்தியாவில் 500 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட […]

You May Like