மின்துறையின் தேவையை நிறைவேற்றும் வகையில் நிலக்கரி விநியோகத்திற்கு இந்திய ரயில்வே முன்னுரிமை அளித்துள்ளது.
மின்துறையின் தேவையை நிறைவேற்றும் வகையில் நிலக்கரி விநியோகத்திற்கு இந்திய ரயில்வே முன்னுரிமை அளிக்கிறது. நடப்பு நிதியாண்டில் (ஏப்ரல்-ஃபிப்ரவரி) வரை நாளொன்றுக்கு 408 அடுக்குகள் நிலக்கரி அனுப்பப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 344 அடுக்குகள் அனுப்பப்பட்டிருந்தது. அதாவது நாளொன்றுக்கு 64 அடுக்குகள் அதிகரித்துள்ளது.
பிப்ரவரி 2023 அன்று, நாளொன்றுக்கு 426.3 அடுக்குகள் அனுப்பப்பட்ட நிலையில் கடந்த ஆண்டின் ஃபிப்ரவரி மாதத்தில் 399 அடுக்குகள் அனுப்பப்பட்டுள்ளது. அதாவது நாளொன்றுக்கு 27.3 அடுக்குகள் (ரேக்ஸ்) அதிகமாக அனுப்பப்பட்டுள்ளன.