fbpx

‘இந்திய ராணுவ வீரர்கள் வெளியேற்றப்படுவார்கள்’..!! மாலத்தீவு அதிபர் அதிரடி..!!

இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத்தீவுக்கு பிரதமர் மோடி சமீபத்தில் சென்று வந்த நிலையில், அவரது அனுபவங்களை தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவு செய்தார். மாலத்தீவுக்கு போட்டியாக லட்சத்தீவு சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் இந்தியாவின் முயற்சி இருப்பதாக பல கருத்துகள் முன்வைக்கப்பட்டன. இதையடுத்து, பிரதமரின் லட்சத்தீவு பயணத்தை முன் வைத்து, மாலத்தீவு அமைச்சர்கள் உள்ளிட்ட அந்நாட்டின் தலைவர்கள் சிலர் இந்தியா மற்றும் பிரதமர் மோடியை அவமதிக்கும் வகையில் கருத்துகளை பதிவிட்டனர். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு சீனாவின் அதிபரை சந்தித்தார். பின்னர் நாடு திரும்பிய அதிபர், மார்ச் 15ஆம் தேதிக்குள் இந்திய அரசு மாலத்தீவில் உள்ள தனது ராணுவத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று அதிபர் கேட்டுக் கொண்டார். கடந்தாண்டு நடந்த மாலத்தீவு தேர்தல் பிரசாரத்தின் போதே முய்ஸு, இந்தியாவுடனான உறவுகளைக் குறைப்பேன் என்றும் சீனாவுடனான உறவை மேம்படுத்துவேன் என்றும் கூறியிருந்தார்.

அப்போதே அவர் மாலத்தீவில் இருக்கும் இந்திய ராணுவத்தையும் வெளியேற்றுவேன் என்பதை முன்வைத்து இந்தியா அவுட் என் பிரச்சாரத்தை முன்னெடுத்திருந்தார். தொடர்ந்து அதிபராகத் தேர்வான பிறகு அவர் கடந்த நவம்பர் மாதம் இந்தியா தனது வீரர்களைத் திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மாலத்தீவு நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அதிபர் முகமது மூயிஸ், வெளிநாட்டு ராணுவ இருப்பு தங்கள் நாட்டில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்றும் நாட்டின் இறையாண்மை சார்ந்த விவகாரங்களில் சமரசம் செய்யும்படியான எவ்வித ஒப்பந்தங்களுக்கும் அரசு அனுமதிக்காது என்றும் தெரிவித்தார். முதற்கட்டமாக மார்ச் 10ஆம் தேதிக்குள் ஒரு விமான தளத்திலும், மே 10ஆம் தேதிக்குள் மீதமுள்ள 2 விமான தளங்களிலும் பணிபுரிகின்ற இந்திய ராணுவ வீரா்கள் வெளியேறுவார்கள் என தெரிவித்தார்.

Chella

Next Post

மக்களவைத் தேர்தல்!… அரசியல் கட்சிகளுக்கு கட்டுப்பாடு விதித்த தேர்தல் ஆணையம்!

Tue Feb 6 , 2024
தேர்தல் பிரசாரத்தில் குழந்தைகளை ஈடுபடுத்த வேண்டாம் என அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளநிலையில், இதற்கான ஏற்பாடுகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில், சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள் உள்ளிட்ட எந்த வகையிலும் குழந்தைகளை தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுத்த வேண்டாம் என அரசியல் கட்சிகளுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. அரசியல் கட்சிகளுக்கு அனுப்பியுள்ள அறிவுறுத்தலில், தேர்தல் பணியின் போது […]

You May Like