இந்தியாவை அவமதித்ததற்காக சீனாவை சேர்ந்த டாக்ஸி டிரைவருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இன வெறி அடிப்படையில் நடந்து கொண்டதற்காக அபராதம் விதிக்கப்பட்டதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்து இருக்கிறது.
சிங்கப்பூரில் டாக்ஸி டிரைவராக பணியாற்றி வருபவர் சீனாவை சேர்ந்த பெஹ் பூன் ஹுவா(54). இவரது டாக்ஸியில் சிங்கப்பூரைச் சேர்ந்த பெண் தனது ஒன்பது வயது மகளுடன் பயணம் செய்திருக்கிறார். அந்தப் பெண்ணின் இறங்கும் இடம் தொடர்பாக டிரைவர் மற்றும் அந்த பெண்ணிற்கிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த டிரைவர் தான் ஒரு சைனீஸ் என்றும் நீ ஒரு இந்தியன் நீ மோசமானவன் என்று தெரிவித்ததாக தெரிகிறது. மேலும் அந்தப் பெண் தான் ஒரு சிங்கப்பூர் பிரஜை என்பதையும் தெரிவித்துள்ளார்.இதனை அந்தப் பெண் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து அந்த நபருக்கு எதிராக வழக்கு பதிவும் செய்துள்ளார்.
இந்த வழக்கை விசாரணை செய்த சிங்கப்பூர் நீதிமன்றம் இனவெறி அடிப்படையில் பெண்ணை தவறாக பேசியதற்கு சீனாவை சார்ந்த டாக்சி டிரைவருக்கு 3000 சிங்கப்பூர் டாலர்கள் அபராதமாக விதிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்தியாவை குறி வைத்து சீன டாக்ஸி டிரைவர் அவதூறாக பேசிய சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.