இந்தியாவில் உடல் பருமனை தடுப்பதற்கான (anti-obesity drug)மருந்து விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளதாக புள்ளி விவரங்கள் காட்டுகின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தவகை மருந்துகளின் விற்பனை நான்கு மடங்கு உயந்து மாதத்திற்கு ரூ.576 கோடியாக உள்ளது.
உலக சுகாதார அமைப்பின் (WHO) தரவுகளின்படி, உடல் பருமன் இப்போது உலகளாவிய அளவில் பரவும் தொற்றுநோயாக மாறியுள்ளது. இது ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2.8 மில்லியன் மக்களின் உயிரிழப்பிற்கு காரணமாக அமைந்துவருகிறது. உடற்பயிற்சி மற்றும் சீரான உணவுமுறை ஆகியவை எடை குறைக்கும் முக்கியமான வழிகள் என்றாலும், அவற்றை மட்டும் நம்பி உடல் பருமனை கட்டுப்படுத்துவது சவாலானதாக உள்ளது. இதனால், எடையைக் குறைக்க உதவும் மருந்துகள் மீது மக்கள் அதிக நம்பிக்கையைக் காட்டத் தொடங்கியுள்ளனர்.
ஓசெம்பிக் (Ozempic) மற்றும் வெகோவி (Wegovy) போன்ற மருந்துகள் தற்போது அதிக அளவு மக்களால் பயன்படுத்தப்படுகிறது. இது உடல் பருமனை கட்டுப்படுத்தும் மருந்துகளுக்கான மாபெரும் சந்தை வளர்ச்சியை நமக்கு சுட்டிக்காட்டுகிறது. இந்த மருந்துகள், ஆரம்பத்தில் நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்க உருவாக்கப்பட்டவை. இவை இன்சுலின் போன்ற செயல்பாடுகளை கொண்டிருப்பதால், மருத்துவ உலகில் பயனுள்ளதாகக் கருதப்படுகின்றன. இப்போது, இந்த மருந்துகள் உடல் எடையை குறைக்கும் நோக்கத்திற்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
அனைத்து மருந்துகளும் உடல் பருமனை குறைக்கும் நோக்கத்திற்காக அங்கீகரிக்கப்பட்டவை அல்ல. எனவே, இவை மருத்துவ நிபுணரின் கவனத்துடனும், பரிந்துரையுடனும் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். மேலும், இந்த மருந்துகளை வணிகரீதியாக எடை மேலாண்மைக்கு பயன்படுத்துவது, காப்பீட்டுத் துறையில் முக்கியமான பொறுப்பு சிக்கல்களையும், கட்டுப்பாடுகளையும் ஏற்படுத்துகிறது.
இந்த மருந்துகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டால், அல்லது சரியான மருத்துவ மேற்பார்வையின்றி பரிந்துரைக்கப்பட்டால், பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். மேலும், இம்மருந்துகள் பெரும் மக்கள்தொகையில் பயன்படுத்தப்படும்போது பக்கவிளைவுகள் என்னென்ன என்பதை பற்றிய முழுமையான அறிவும் இன்னும் உருவாகவில்லை. இது, மருத்துவ தரவுகளின் குறைபாடு, காப்பீட்டு சிக்கல்கள், மற்றும் பொதுநலத்துக்கான ஆபத்துகளை மேற்கொள்காட்டுகிறது.
Read more: திருப்பதி To காட்பாடி.. இரட்டை ரயில் பாதைக்கு ரூ.1,332 கோடி ஒதுக்கீடு..!! பயண நேரம் குறையுமா..?