fbpx

இந்தியாவின் பணக்கார முதலமைச்சரின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா..? தமிழக முதல்வருக்கு எவ்வளவு சொத்து..?

இந்தியாவின் பணக்கார முதலமைச்சர் பட்டியலில் ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு முதலிடத்தில் உள்ளார். அவரின் சொத்து மதிப்பு ரூ. 931 கோடி சொத்துக்களுடன் முதலிடத்தில் உள்ளார். ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குவங்கத்தை சேர்ந்த மம்தா பானர்ஜி வெறும் 15 லட்சத்துடன் ஏழ்மையான முதலமைச்சராக இருக்கிறார்.

மாநில சட்டமன்றங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரு முதலமைச்சரின் சராசரி சொத்து ரூ.52.59 கோடி என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் தனிநபர் நிகர தேசிய வருமானம் 2023-2024 இல் தோராயமாக ரூ. 1,85,854 ஆக இருந்தபோது, ​​ஒரு முதலமைச்சரின் சராசரி சுய வருமானம் ரூ. 13,64,310 ஆகும், இது இந்தியாவின் சராசரி தனிநபர் வருமானத்தை விட 7.3 மடங்கு அதிகம். 31 முதல்வர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.1,630 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அருணாச்சல பிரதேசத்தின் பெமா காண்டு சுமார் 332 கோடி ரூபாய் சொத்துக்களுடன் இந்தியாவின் பணக்கார முதலமைச்சர்கள் பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கிறார்.

கர்நாடகாவின் சித்தராமையா 51 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துகளுடன் இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் ரூ.8 கோடியே 88 லட்சம் மதிப்பிலான சொத்துக்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் 14-வது இடத்தில் உள்ளார்.

மறுபுறம் ஏழ்மையான முதலமைச்சர்கள் பட்டியலில் ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, ரூ.55 லட்சம் சொத்துக்களுடன், இரண்டாவது இடத்திலும், பினராயி விஜயன் ரூ.1.18 கோடியுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

அருணாச்சல பிரதேச முதலமைச்சர் பெமா காண்டுவுக்கு ரூ.180 கோடி கடன் உள்ளது. சித்தராமையாவுக்கு ரூ.23 கோடியும், சந்திரபாபு நாயுவுக்கு ரூ.10 கோடிக்கும் மேல் கடன்கள் உள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது. 31 முதல்வர்களில், இருவர் மட்டுமே பெண்கள். மேற்கு வங்காளத்தின் மம்தா பானர்ஜி மற்றும் டெல்லியின் அதிஷி ஆகியோர் 2 பெண் முதலமைச்சர்கள் ஆவர்.

குற்றவியல் வழக்குகள்

மாநில சட்டசபைகள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆய்வு செய்யப்பட்ட 31 முதல்வர்களில் 13 (42 சதவீதம்) பேர் தங்களுக்கு எதிராக கிரிமினல் வழக்குகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர். சுமார் 10 (32 சதவீதம்) முதல்வர்கள் கொலை முயற்சி, கடத்தல், லஞ்சம் மற்றும் கிரிமினல் மிரட்டல் உள்ளிட்ட கடுமையான கிரிமினல் வழக்குககள் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி மீது 34 கிரிமினல்கள் வழக்குகள் உள்ளதால் அதிக வழக்குகள் கொண்ட முதலமைச்சர்களில் அவர் முதலிடத்தில் உள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிகபட்சமாக 11 வழக்குகளுடன், இரண்டாவது இடத்தில் உள்ளார்.

Read More : ”அந்த சாரை காப்பாற்ற திமுக அமைச்சர்கள் முயற்சி”..!! ”நீதி கிடைக்கும் வரை போராட்டம் நிற்காது”..!! எடப்பாடி பழனிசாமி அதிரடி..!!

English Summary

Andhra Pradesh Chief Minister Chandrababu Naidu tops the list of richest Chief Ministers in India.

Rupa

Next Post

விவசாயிகளிடம் மாவட்ட அளவில் தான் கரும்பு கொள்முதல் செய்ய வேண்டும்...! தமிழக அரசு அதிரடி உத்தரவு...!

Wed Jan 1 , 2025
Sugarcane should be purchased from farmers at the district level only.

You May Like