fbpx

ராகுல் காந்தியின் அறிவைக் கண்டு நான் பரிதாபப்படுகிறேன்….! அமைச்சர் அதிரடி….!

சில மாதங்களுக்கு முன்னர் பாரத் ஜூடோ யாத்திரை என்ற பெயரில் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த ராகுல் காந்தி தமிழகத்தில் கன்னியாகுமரியில் இருந்து யாத்திரையை தொடங்கினார்.

கன்னியாகுமரியில் தொடங்கப்பட்ட இந்த யாத்திரை புதுவை, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை கடந்து தற்சமயம் காஷ்மீர் மாநிலத்தில் முடிவடைந்து இருக்கிறது.

கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொது தேர்தலில் மோடியிடம் ஆட்சியை இழந்த காங்கிரஸ் கட்சி 10 வருடங்கள் ஆன பிறகும் ஆட்சியை பிடிக்க முடியாமல் தள்ளாடி வருகிறது.

இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று நினைத்த காங்கிரஸ் தலைமை காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கையாக திகழ்ந்துவரும் ராகுல் காந்தியை வைத்து ஒரு திட்டத்தை போட்டது. அதாவது, நாடு முழுவதும் அவரை வைத்து ஒரு யாத்திரையை நடத்த திட்டமிட்ட காங்கிரஸ் கட்சியின் தலைமை பாரத் ஜூடோ யாத்திரை என்ற பெயரில் ஒரு யாத்திரையை தொடங்கியது.

அந்த யாத்திரை தற்போது காஷ்மீர் மாநிலத்தில் முடிவுக்கு வந்திருக்கிறது. இந்த நிலையில், காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் தன்னுடைய இந்திய ஒற்றுமை யாத்திரையை நிறைவு செய்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தன்னுடைய பாட்டி இந்திரா காந்தி மற்றும் தந்தை ராஜீவ் காந்தி உள்ளிட்டவர் கொலை செய்யப்பட்ட செய்தியை தொலைபேசி மூலமாக அறிந்த போது மிகுந்த வேதனை அடைந்தேன் என்று கூறியிருக்கிறார்.

மேலும் வன்முறையை தூண்டும் விதமாக நடந்து கொள்ளும் நரேந்திரமோடி, அமித்ஷா, பாஜக, ஆர் எஸ் எஸ் அமைப்பினர் உள்ளிட்டோர் அந்த வழியை அறிந்திருக்க வாய்ப்பில்லை. ராணுவத்தினருக்கும், காஷ்மீரியர்களுக்கும் தான் அந்த வலி தெரியும் என கூறியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் உத்தரகாண்ட் மாநில விவசாயத்துறை அமைச்சர் கணேஷ் ஜோஷி நேற்று முன்தினம் பத்திரிகையாளர்களிடம் பேசினார். அப்போது, ராகுல் காந்தியின் அறிவை பார்த்து நான் பரிதாபப்படுகிறேன். ஆனால் அவரவருக்கு இருக்கும் அறிவுக்கு ஏற்றார் போல தானே பேச முடியும் என்று நகைச்சுவையாக தெரிவித்திருக்கிறார்.

மேலும் தியாகம் என்பது இந்திரா காந்தியின் குடும்பத்திற்கு மட்டுமே சொந்தமானதல்ல. இந்திய விடுதலை போராட்டத்தில் பகத்சிங் சாவர்க்கர் சந்திரசேகர் ஆசாத் உள்ளிட்டோர்தான் தியாகம் செய்திருக்கிறார்கள் இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் கொலை செய்யப்பட்டது தியாகம் அல்ல.

அது ஒரு விபத்து. தியாகத்திற்கும், விபத்திற்கும் வித்தியாசம் உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியால்தான் ராகுல் காந்தியால் ஸ்ரீநகரின் லால் சவுக்கில் தேசிய கொடி ஏற்றமுடிந்தது.காஷ்மீருக்கான 370 வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டிருக்காவிட்டால் அங்கே இயல்பு நிலை திரும்பி இருக்காது என்று தெரிவித்திருக்கிறார்.

Next Post

PART1-மத்திய பட்ஜெட் 2023-2024: அனைவருக்கும் வீடு... ஒரு லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்கள்.. பல அறிவிப்புகள்...

Wed Feb 1 , 2023
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம், 2023-24ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் மோடி அரசின் கடைசி முழு பட்ஜெட் என்பதால் பெரும் பரபரப்புக்கு இடையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்து கொண்டு இருக்கிறார். மன்மோகன் சிங், அருண் ஜெட்லி மற்றும் சிதம்பரம் போன்றவர்களைத் தொடர்ந்து, ஐந்தாவது முறையாக தொடர்ச்சியாக பொது பட்ஜெட்டைத் […]

You May Like