fbpx

ரெடியா இருங்க…! 10 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு.. மட்டும்.! இ-சேவை மையம் மூலம் நாளை முதல்…!

பொதுத்தேர்வுக்கு நாளை முதல் ஜனவரி 7-ம் தேதி வரை இ-சேவை மையங்களின் மூலம் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது

2023 மார்ச் மாதம் நடைபெற உள்ள 10, 11 மற்றும் 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வினை எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் விடுமுறை நாட்கள் தவிர, பிற நாட்களில் அரசுத் தேர்வுத்துறையால் அறிவிக்கப்பட்டுள்ள மையங்களுக்கு நேரில் சென்று ஆன்லைன் மூலம் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பிக்க நேற்று வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் தனித்தேர்வர்கள் விண்ணப்பம் செய்ய அனுமதிக்கப்பட்ட நாட்களில் விண்ணப்பிக்க முடியாதவர்கள் ஜனவரி 5-ம் தேதி முதல் 7-ம் தேதி வரையில் அரசுத்தேர்வுகள் இயக்கத்தின் இ-சேவை மையங்களின் மூலம் ஆன்லைனில் கூடுதலாக மேல்நிலை வகுப்பிற்கு ரூ.1,000 மற்றும் பத்தாம் வகுப்பிற்கு ரூ.500 செலுத்தி விண்ணப்பிக்கலாம். அரசுத் தேர்வுத்துறையின் இ-சேவை மையங்கள் குறித்த விவரங்களை https://dge1.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

#Leave: இந்த மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..!

Wed Jan 4 , 2023
நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை. நீலகிரி மாவட்டத்தில் படுகர் இன மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். ஒவ்வொரு வருடமும், படுகர் இன மக்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஹெத்தையம்மன் திருவிழா இன்று நடைபெறுகிறது. ஹெத்தையம்மன் படுகர் இன மக்களின் குலதெய்வமாக கருதப்படுகிறது. இதனால் அங்குள்ள சின்ன பிக்கட்டி, பெரிய பிக்கட்டி,ஜெகதளா, காரக்கொரை, ஓதனட்டி, பேரட்டி, மல்லிக்கொரை, மஞ்சுதளா ஆகிய 8 […]

You May Like