fbpx

நாளை கடைசி நாள்…! 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்…! இல்லை என்றால் சிக்கல்…

10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்விற்கு விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்கள், பிப்ரவரி 1-ம் தேதி வரை தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம்.

இது தொடர்பாக அரசு தேர்வுத்துறை இயக்குநர் சேது ராமவர்மா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்விற்கு விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள் தட்கல் முறையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்கள் 1-ம் தேதி வரை, மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் இயக்கக சேவை மையங்களில் நேரில் சென்று தேர்வுக் கட்டணத்துடன் சிறப்புக் கட்டணம் செலுத்தி விண்ணப்பங்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.

மேல்நிலை மாணவர்கள் ஆயிரம் ரூபாயும், 10-ம் வகுப்பு மாணவர்கள் 500 ரூபாயும் சிறப்புக்கட்டணம் செலுத்த வேண்டும். மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத்துறையின் சேவை மையங்களின் விவரங்களையும், தேர்விற்கான அறிவுரைகள் மற்றும் தகுதிகளையும் www.dge1.tn.gov.in என்ற இணையதளத்திலும், கல்வித்துறையின் அலுவலகங்களிலும் தெரிந்து கொள்ளலாம்‌.

Vignesh

Next Post

பயங்கர அலர்ட்...! 65 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று...! இந்த 10 மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை...!

Tue Jan 31 , 2023
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கை – திரிகோண மலையில் இருந்து கிழக்கு – தென்கிழக்கே சுமார் 670 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து கிழக்கு […]

You May Like