fbpx

2025 அக்டோபர் 1 முதல் மோட்டார் வாகன ஓட்டுநர் பகுதிகளில் குளிர்சாதன அமைப்பு நிறுவுவது கட்டாயம்…!

இந்தியாவில் 2025 அக்டோபர் 1 முதல் தயாரிக்கப்படும் என் 2, என் 3 வகைகளைச் சேர்ந்த மோட்டார் வாகனங்களின் ஓட்டுநர் பகுதிகளில் குளிர்சாதன அமைப்பு நிறுவுவதை கட்டாயமாக்குவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

2025 அக்டோபர் 1 முதல் தயாரிக்கப்படும் என் 2, என் 3 வகைகளைச் சேர்ந்த மோட்டார் வாகனங்களின் ஓட்டுநர் பகுதிகளில் குளிர்சாதன அமைப்பை நிறுவுவதை கட்டாயமாக்கி 2023, டிசம்பர் 8 அன்று சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவிக்கை வெளியிட்டது. குளிர்சாதன அமைப்பு பொருத்தப்பட்ட ஓட்டுநர் பகுதியின் செயல்திறன் சோதனை ஐ.எஸ் 14618: 2022 -ன் படி, அவ்வப்போது திருத்தப்படும்.

இந்த அறிவிப்பின்படி, 2025 அக்டோபர் 1 ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு டிரைவ்-அவே சேசிஸ் வடிவில் தயாரிக்கப்படும் என் 2, என் 3 வகையின் எந்தவொரு வாகனமும், ஐஎஸ் 14618:2022 -ன் படி குளிர்சாதன அமைப்பு வகை அங்கீகரிக்கப்பட்ட உபகரணத் தொகுப்பை வழங்க வேண்டும். மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் 2023, ஜூலை 10 அன்று சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து கருத்துக்களைக் கேட்டு வரைவு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Vignesh

Next Post

இன்று அமாவாசை..!! வீடுகளில் இதை மட்டும் செய்து பாருங்க..!! மறந்துறாதீங்க..!!

Tue Dec 12 , 2023
இன்று கார்த்திகை மாத அமாவாசை திதி. முன்னோர்களுக்கு திதி கொடுக்க காட்டுகிற ஆர்வத்திலும், அக்கறையிலும் இருந்தாலும், பலர் ஏன் அமாவாசை அன்று தர்ப்பணம் தருகிறோம் என்பது தெரியாமலேயே தர்ப்பணம் தருகின்றனர். சாஸ்திரங்களையும், சம்பிரதாயங்களையும் புரிந்து கொள்ளுங்கள். எல்லோரும் செய்கிறார்களே என்று உங்கள் மூதாதையரிடம் மனம் விட்டு பிரார்த்தனை செய்யாமல் அமாவாசையன்று தர்ப்பணம் தருவதினால் ஒரு பலனும் கிடைக்காது. ஆண்டுகளில் அனைத்து மாதங்களிலுமே அமாவாசை வருகிறது. அனைத்து அமாவாசை தினத்திலும் தர்ப்பணம் […]

You May Like