fbpx

ரிசர்வ் வங்கி போன்ற நிறுவனங்களுக்கு “பாரத்” என பெயர் மாற்றம் செய்ய வேண்டும்…!

அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ‘பாரத்’ என்ற பெயரை வைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்திய ரிசர்வ் வங்கி போன்ற நிறுவனங்களுக்கு புதிய பெயர் சூட்டப்பட வேண்டும் என்று தனது கருத்தை பதிவு செய்துள்ளார். பாரதத்தின் பிரதமராக இந்திரா காந்தியும், மன்மோகன் சிங்கும் இருந்த ஆட்சிக் காலத்தில் பாரதம் எந்த ஒரு மாற்றத்தையும் சந்திக்கவில்லை. இது இந்தியாவாக இருந்தாலும் சரி, பாரதமாக இருந்தாலும் சரி, இது சர்ச்சைக்குரியது என்று நான் நினைக்கவில்லை என கூறியுள்ளார்.

இந்தியா மற்றும் பாரத் ஆகிய பெயர்களை ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்தலாம் என்று உச்ச நீதிமன்றமே தெரிவித்துள்ளது. மத்திய அமைச்சர் அமித் ஷா பாராளுமன்றத்தில் பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தை அறிமுகப்படுத்தியபோது யாரும் எதிர்க்கவில்லை.

மன்மோகன் சிங் பாரதத்தின் பிரதமராகப் பதவியேற்றார், எச்.டி. தேவகவுடா இந்தியாவின் பிரதமராகப் பதவியேற்றார். இதுவரை எனக்கு நினைவிருக்கிறது, இந்திரா காந்தியும் இந்தியாவின் பிரதமராக அல்ல, பாரத் கா பிரதான் மந்திரியாகப் பதவி ஏற்றதாக கூறினார். “இந்தியா” என்ற சொல் பிரிட்டிஷ் காலத்தில் இருந்து வந்த பழக்கவழக்கங்கள் என்றும், தேசம் “மறுமலர்ச்சியின் கட்டத்தில் உள்ள நிலையில் அதனை கைவிட வேண்டும் என்று கூறினார் ‌.

Vignesh

Next Post

உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ஸ்க்ரப் டைபஸ் தொற்று!… இமாச்சல பிரதேசத்தில் 5 பேர் பலி!… 700ஐ தாண்டிய பாதிப்பு!

Thu Sep 7 , 2023
உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ஸ்க்ரப் டைபஸ் தொற்று வேகமாக பரவிவருகிறது. இமாச்சல பிரதேசத்தில் 5 பேர் பலியாகியுள்ளதாகவும் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 700ஐ தாண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் 19வயது ஐஐடி – ஜேஇஇ ஆர்வலர் உயிரிழந்ததற்கு பாக்டீரிய தொற்று காரணமாக இருந்ததை தொடர்ந்து ஸ்க்ரப் டைபஸ் தொற்று பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது. இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவில் ஸ்க்ரப் டைபஸ் என்ற வகை காய்ச்சல் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. […]

You May Like