fbpx

தீவிரமடைந்த கோடை மழை..!! 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை..!! வானிலை மையம் சொன்ன குட் நியூஸ்..!!

கேரளாவில் கோடை மழை தீவிரமடைந்துள்ள நிலையில், திருவனந்தபுரம், பத்தினம்திட்டா, எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 5 நாட்கள் ஒரு சில இடங்களில் காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், கர்நாடகாவில் இன்று முதல் 3 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் கேரளாவில் இன்று முதல் 5 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 3 இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது. கோவை மாவட்டம் மாக்கினாம்பட்டி, பொள்ளாச்சி, தூத்துக்குடியில் நேற்று கனமழை பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பொள்ளாச்சி அருகே மாக்கினாம்பட்டியில் 8 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. பொள்ளாச்சி, தூத்துக்குடியில் தலா 7 செ.மீ. மழை பெய்துள்ளது.

கோவை மாவட்டம் ஆழியார், ஸ்ரீவில்லிபுத்தூர், நத்தம், வீரபாண்டி, நீலகிரி பார்வுட் எஸ்டேட்டில் தலா 6 செ.மீ. மழையும், குமரி மாவட்டம் கலியல், மைலாடி, கோவை மாவட்டம் சின்கோனாவில் தலா 5 செ.மீ. மழைப் பொழிந்துள்ளது. திற்பரப்பு, கோழிப்போர்விளை உள்ளிட்ட 12 இடங்களில் தலா 4 செ.மீ. மழையும், ஆனைக்கிடங்கு, எலந்தகுட்டை மேடு, சந்தியூர், மூலனூர் உள்ளிட்ட 17 இடங்களில் தலா 3 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று 50-க்கும் மேற்பட்ட இடங்களில் 2 செ.மீ. மழை, 100க்கும் மேற்பட்ட இடங்களில் 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

Read More : திருமணத்திற்கு பிறகு பெண்களின் உடல் எடை அதிகரிக்க என்ன காரணம்..? நிபுணர்கள் சொல்வது என்ன..?

Chella

Next Post

முடங்கும் சென்னை மெட்ரோ ரயில் திட்டம்? நிதி ஒதுக்காமல் தமிழகத்தை தவிக்க விடும் மத்திய அரசு..! RTI-யில் அம்பலமான ஷாக் தகவல்!

Tue May 14 , 2024
சென்னையோடு சேர்த்து அறிவிக்கப்பட்ட நாக்பூர், பெங்களூரு, கொச்சி மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்திருக்கும் மத்திய அரசு தமிழ்நாட்டு மட்டும் நிதி ஒதுக்காமல் சென்னை மெட்ரோவை புறக்கணித்திருப்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட திட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்றுவருகின்றன. 118.9 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேற்கொள்ளப்படும் இந்த இரண்டாம் கட்ட திட்டப் பணிகளுக்கு […]

You May Like