fbpx

‘பெண்களுக்கு ரூ.3 லட்சம் வரை வட்டியில்லா கடன்’ 50% மானியமும் உண்டு!! மத்திய அரசின் அசத்தலான திட்டம் பற்றி தெரியுமா?

நாம் பார்க்கப்போகும் இந்தத் திட்டத்தின் பெயர் பணியாளர் திட்டம் ஆகும். பெண் வியாபாரிகளுக்காக மத்திய அரசு கொண்டுவந்த திட்டம். மத்திய அரசின் மகளிர் மேம்பாட்டு கழகம் இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் ஏழை பெண் வியாபாரிகளுக்கு மத்திய அரசு பணம் வழங்குகிறது. அந்த பணத்தில் வியாபாரம் செய்து வளர்ச்சி அடைய வேண்டும் என்ற நோக்கத்திற்காக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த பணத்தை எப்படி பெறுவது என்று பார்ப்போம்.

இந்த பணத்தை நகரங்களில் உள்ள பெண்களுக்கு வழங்குவதை விட கிராமங்களில் உள்ள பெண்களுக்கு வழங்க மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. எனவே கிராமங்களில் வசிக்கும் பெண்கள் இந்தப் பணத்தை அதிகமாகப் பெறலாம். இந்தப் பணத்தைப் பெறுவதன் மூலம், பயனாளியின் வருமானம் மற்றும் குடும்ப வருமானம் அதிகரித்து, நாடு பயனடையும் என்று மத்திய அரசு நம்புகிறது. இந்த பணத்தை மத்திய அரசு இலவசமாக தருவதில்லை. இது வட்டியில்லா கடன் ஆகும். எனவே, அந்த பணத்தை வியாபாரத்திற்கு பயன்படுத்தி திரும்ப செலுத்த வேண்டும். இத்திட்டத்தின் மூலம் கிராமப்புற பெண் விவசாயிகளும் வங்கிகளில் வட்டியில்லா கடன் பெறலாம்.

இந்த பயனாளர் திட்டத்தின் வாயிலாக ரூ.50,000 முதல் ரூ.3,00,000 லட்சம் வரை வட்டியில்லா கடன் பெற்றுக் கொள்ள முடியும்.வாழை இலை உற்பத்தி,அழகு நிலையம்,அகர்பத்தி உற்பத்தி,சப்பல் உற்பத்தி,பால் மற்றும் கோழிப்பண்ணை,பூக்கடை,பாய் நெய்தல் உள்ளிட்ட 88 சிறுதொழில்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் கடன் வழங்கப்படுகிறது. மேலும் இத்திட்டத்தின் மூலம் பெறப்படும் கடன்களுக்கு மத்திய அரசு 30% வரை மானியம் வழங்குகிறது.

இத்திட்டத்தில் பயன்பெற தேவையான தகுதி :

  1. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பெண்கள் இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.
  2. 18 முதல் 55 வயது வரை உள்ள ஏழைப்பெண்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பம் செய்யலாம்.
  3. ஆண்டு வருமானம் ரூ.1.5 லட்சத்திற்கு கீழ் இருப்பது அவசியம்.
  4. ஒற்றைப் பெண்கள் மற்றும் ஊனமுற்ற பெண்களுக்கு குடும்ப வருமான வரம்பு இல்லை.
  5. இந்தக் கடன் வழங்கும் போது SC/ST பெண்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது. 
  6. பெண்ணின் வயது 18 முதல் 55 வயது வரை இருக்கலாம்.
  7. எந்தவொரு வியாபாரத்தையும் செய்யும் பெண்கள் இந்தக் கடனுக்குத் தகுதியுடையவர்கள் ஆவர்.
  8. கடன் பெற விரும்பும் பெண்கள், வங்கிகளில் வாங்கிய கடனை உரிய காலத்தில் செலுத்தியிருக்க வேண்டும்.

பயனாளர் திட்டத்தில் பயன்பெற தேவைப்படும் ஆவணங்கள்:-

1)ஆதார் அட்டை
2)பிறப்புச் சான்றிதழ்
3)வங்கி பாஸ் புக்
4)வருமானச் சான்றிதழ்
5)பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
6)ரேசன் கார்டு
7)உங்கள் தொழிலின் திட்ட அறிக்கை ஆவணங்கள்

பயனாளர் திட்டத்திற்கு ஆன்லைன் அல்லது நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் வாயிலாக விண்ணப்பம் செய்ய முடியும்.

Read more ; ரொனால்டோவின் 19 ஆண்டுகால சாதனை முறியடிப்பு!. துருக்கி வீரர் மெஸ்ஸி அர்டா குலர் அசத்தல்!

    English Summary

    Interest-free loan up to Rs.3 lakh for women and 50% subsidy. Do you know about the amazing scheme of the central government?

    Next Post

    முகம் பளபளப்பாக!. முதலையின் சிறுநீர் முதல் வியர்வை வரை!. பெண்களின் அழகு சிகிச்சைகள்!

    Wed Jun 19 , 2024
    The face is shiny! From crocodile urine to sweat!. Beauty treatments for women!

    You May Like