சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், முதல் போட்டியில் இந்திய அணி இலங்கை அணியை எதிர்கொள்கிறது.
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்கில் 6 நாடுகளைச் சேர்ந்த புகழ்பெற்ற வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த நாடுகளைச் சேர்ந்த மாஸ்டர்களை ஒன்றிணைத்து கிரிக்கெட்டின் தலைசிறந்த ஐகான்களைக் கொண்டாடுவதே இதன் முதன்மை நோக்கமாகும். இந்த லீக்கில் மொத்தம் 18 போட்டிகள் நடைபெறும். ஒவ்வொரு அணியும் மற்ற 5 அணிகளுடன் ஒரு முறை ரவுண்ட் ராபின் முறையில் மோதும். பின்னர் முதல் 4 அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும். 2 அரையிறுதிப் போட்டிகளிலும் வெற்றி பெறும் அணிகள் மார்ச் 16ஆம் தேதியன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் மோதும்.
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் நடைபெறும் மைதானங்கள் :
* நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் மைதானம்
* ராய்ப்பூரில் உள்ள ஷாஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானம்
* வதோதராவில் உள்ள பி.சி.ஏ மைதானம்
தேதி மற்றும் நேரம் :
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்கின் முதல் போட்டி மார்ச் 22ஆம் தேதியான இன்றும், இறுதிப் போட்டிகள் மார்ச் 16ஆம் தேதியான ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறும். அனைத்துப் போட்டிகளும் இந்திய நேரப்படி மாலை 7:30 மணிக்குத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் 2025இல் பங்கேற்றுள்ள அணிகள் :
* இந்தியா மாஸ்டர்ஸ்
* ஆஸ்திரேலியா மாஸ்டர்ஸ்
* இங்கிலாந்து மாஸ்டர்ஸ்
* இலங்கை மாஸ்டர்ஸ்
* மேற்கிந்திய தீவுகள் மாஸ்டர்ஸ்
* தென்னாப்பிரிக்கா மாஸ்டர்ஸ்
குறிப்பாக 14 ஆண்டுகளுக்குப் பிறகு சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங் இணைந்து விளையாட உள்ளதால், போட்டியை காண ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
Read More : இந்தி கற்பிக்க விருப்பமா..? தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களிடம் கருத்துக் கணிப்பு..!! அண்ணாமலை சொன்ன யோசனை