fbpx

Woww…! கிராம சேவை மையம்‌ மூலம்‌ 1 GBPS வேகத்தில்‌ இணையதள இணைப்பு வசதி…! ஆட்சியர் தகவல்…!

தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம்‌ ஓர்‌ அரசு நிறுவனம்‌ ஆகும்‌. இதன்‌ மூலம்‌ அனைத்து கிராம ஊராட்சிகளின்‌ கிராம சேவை மையம்‌ மூலம்‌ 1 GBPS வேகத்தில்‌ இணையதள இணைப்பு அனைத்து கிராமங்களுக்கும்‌ வழங்கப்பட உள்ளது.

அதிவேக இணைய சேவை மூலம்‌ பொதுமக்களுக்கு வருவாய்த்‌ துறையில்‌ பெறப்படும்‌ சான்றிதழ்கள்‌ உடனடியாக கிடைக்கவும்‌, பொது விநியோக கடைகளில்‌ பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள்‌ உடனுக்குடன்‌ பெறவும்‌, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத்‌ திட்ட பயனாளிகளுக்கு விரைவாக கூலித்தொகை கிடைக்கவும்‌, இன்னபிற அரசு அலுவலக சேவைகள்‌ உடனுக்குடன்‌ பெறவும்‌ வழிவகுக்கிறது

இணையதள இணைப்பு வசதி செய்து தரும்‌ பொருட்டு தற்பொழுது தமிழ்நாடு மின்‌வாரிய மின்‌ கம்பங்களின்‌ மூலமாக கேபிள்கள்‌ பதிக்கப்பட்டு வருகிறது. இக்கேபிள்கள்‌ கண்ணாடி இழைகளால்‌ ஆனது என்பதால்‌ மின்சாரம்‌ கடத்தாது. தமிழ்நாடு மின்வாரிய மின்கம்பங்களின்‌ மூலமாக கொண்டு செல்ல தமிழ்நாடு மின்‌பகிர்மானக்‌ கழகத்திடம்‌ அனுமதி பெறப்பட்டுள்ளது.

மேலும்‌ தேசிய நெடுஞ்சாலைத்‌ துறை, வனத்துறை, இரயில்வே துறை ஆகிய சம்பந்தப்பட்ட துறைகளிடம்‌ அனுமதி பெறப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

திரேந்திர சாஸ்திரிக்கு ஒய்-பிளஸ் பாதுகாப்பு...! மத்திய அரசு உத்தரவு...!

Thu May 25 , 2023
திரேந்திர சாஸ்திரிக்கு ஒய்-பிளஸ் பாதுகாப்பு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பாகேஷ்வர் தாம் அறக்கட்டளை தலைவர் திரேந்திர சாஸ்திரிக்கு ஒய்-பிளஸ் பாதுகாப்பு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மத்தியப் பிரதேச மாநில அரசும், திரேந்திர சாஸ்திரிக்கு பாதுகாப்பு வழங்குவதற்குத் தேவையான வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. ஒய்-பிளஸ் பாதுகாப்பு என்பது பாபா தீரேந்திர சாஸ்திரி மற்றும் அவரது கான்வாய் அந்தந்த மாநிலத்திற்குள் நுழையும் போதெல்லாம் ஒவ்வொரு மாநிலத்தின் காவல் துறையும் […]

You May Like