அறிவியல் தொழில்நுட்பம் வளர வளர அதனால் ஏற்படும் நன்மையை வீட, ஆபத்து தான் அதிகம். அதுவும் குறிப்பாக இதனால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் தான். இதனால் சமூக வலைத்தளங்களில் பரவும் பல விஷயங்கள் உண்மையா பொய்யா என்பதே தெரியாமல் போய் விடுகிறது. அந்த வகையில், தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் நடித்து வரும் இளம் நடிகை பிரக்யா நாக்ரா கடந்த 2 நாட்களாக ட்விட்டர் உள்ளிட்ட சோஷியல் மீடியாவில் டிரெண்டிங்கில் இருந்து வருகிறார். இதற்க்கு முக்கிய காரணம், அவரது அந்தரங்க வீடியோ வெளியானது தான். தியேட்டர் வாசலில் டிக்கெட்டிற்கு நிற்பது போல இந்த வீடியோவை பார்க்க பலர் ஆர்வம் காட்டி ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். இவர் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான வரலாறு முக்கியம் படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழில் அறிமுகமானார். சமீப காலத்தில் நடிகைகளின் டீப் ஃபேக் வீடியோக்கள் இணையத்தில் காட்டுத்தீ போல் பரவி வரும் நிலையில், இந்த வீடியோ உண்மையா அல்லது ஏஐ மூலம் உருவாக்கப்பட்டதா என்று விவாதம் நடந்தது. இந்நிலையில், பிரக்யா நாக்ரா சற்றுமுன் தனது ட்விட்டர் பகக்த்தில் அந்த வீடியோவில் இருப்பது நான் அல்ல என்றும் அது ஏஐ எடிட் என விளக்கம் அளித்துள்ளார். மேலும், தன்னை போல இனிமேல் எந்தவொரு நடிகையும் இப்படி ஆபாசமான டீப் ஃபேக் வீடியோவால் பாதிக்கக் கூடாது என்றும் சைபர் போலீஸார் இந்த அசிங்கத்துக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
Read more: “ஸ்கூல் போற வயசுல இதெல்லாம் தேவையா?”; வாலிபர்களுடன் லாட்ஜில் தங்கிய மாணவிகளால் பரபரப்பு..