fbpx

உணவு திட்டம் பற்றி அறிய மேரா ரேஷன் 2.0 செயலி அறிமுகம்…! அசத்தும் மத்திய அரசு

பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டப் பயனாளிகளுக்கு அவர்களின் உரிமைகள் பற்றிய தகவல்களை வழங்க மேரா ரேஷன் 2.0 செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசின் முதல் 100 நாட்களில் உணவு – பொது விநியோகத் துறை நான்கு முக்கிய தூண்களை அடப்படையாகக் கொண்டு பணியாற்றியுள்ளது.உணவு, பொது விநியோகத் துறையின் செயல்பாடுகளை டிஜிட்டல் மயமாக்குதல், பொது விநியோகத் திட்டத்தில் சேமிப்புகளையும் சரக்குகளையும் ஒழுங்குபடுத்துதல், நியாய விலைக் கடைகளை மக்கள் மருந்து மையங்களாக மாற்றுதல் மற்றும் உணவு, பொது விநியோகத் துறையின் கீழ் உள்ள நிறுவனங்களை வலுப்படுத்துதல் ஆகும்.

கடந்த 100 நாட்களில், மேற்கண்ட அனைத்து தூண்களிலும் இலக்குகளை அடைவதில் ஏற்கனவே பெரும் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. சில முக்கிய சாதனைகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன:

மக்கள் ஊட்டச் சத்து மையங்கள் தொடக்கம்: 60 நியாய விலைக் கடைகளை மக்கள் ஊட்டச் சத்து மையங்களாக மாற்றுவதற்கான ஒரு முன்னோடித் திட்டம் 2024 ஆகஸ்ட் 20 அன்று தொடங்கப்பட்டது. ஊட்டச்சத்து இடைவெளியை குறைப்பதுடன், உழவர் உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் வருவாய் வழங்க இந்த முன்னோடித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மேரா ரேஷன் 2.0 செயலி: பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டப் பயனாளிகளுக்கு அவர்களின் உரிமைகள் பற்றிய தகவல்களை வழங்க 20 ஆகஸ்ட் 2024 அன்று இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.

பிரதமரின் விரைவு சக்தி பெருந்திட்ட பயன்பாடு: தூரத்தை குறைக்க பொது விநியோக சங்கிலியின் வழித்தட ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போதுள்ள கிடங்குகள், நியாயவிலைக் கிடங்குகளின் உள்கட்டமைப்பு வசதிகளை உகந்த முறையில் பயன்படுத்துவதை இந்த ஆய்வு உறுதி செய்கிறது. இதன் காரணமாக 13 மாநிலங்கள் ஆண்டுக்கு ரூ.112 கோடி சேமிக்க உறுதி செய்துள்ளன.

தர மேலாண்மை அமைப்பு (QMS):பல்வேறு ஆய்வக செயல்பாடுகளை நிகழ்நேர அடிப்படையில் கண்காணிக்க, இந்திய உணவுக் கழகத்தில் (FCI) உள்ள தரக் கட்டுப்பாட்டு ஆய்வகங்களை ஒருங்கிணைத்து இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

கடன் உத்தரவாத திட்டம்: பதிவு செய்யப்பட்ட கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள விளைபொருட்களுக்கு விவசாயிகள், வர்த்தகர்களுக்கு மின்னணு மாற்றத்தக்க கிடங்கு ரசீதுகளுக்கு (e-NWRs) எதிராக பிணைய நிதியை நீட்டிக்க கடன் வழங்குநர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்த கடன் உத்தரவாத திட்டம் (CGS-NPF) அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறுதானியங்களின் சாதனை கொள்முதல்: இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பொது விநியோக, பிற நலத்திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பாதுகாப்பை மேம்படுத்த சிறுதானியங்களை (ஸ்ரீ அண்ணா) கொள்முதல் செய்வதை மத்திய அரசு ஊக்குவிக்கிறது. 2023-24 கரீஃப் பருவத்தில் சிறு தானிய கொள்முதல் 12.49 லட்சம் மெட்ரிக் டன் ஆகும். இது2022-23 உடன் ஒப்பிடும்போது 170% அதிகமாகும்.

English Summary

Introduction of Mera Ration 2.0 app to know about food scheme.

Vignesh

Next Post

இப்போதெல்லாம் ஓய்வு என்பது காமெடி ஆகிவிட்டது!. யு-டர்ன் எடுக்கும் வீரர்கள் குறித்து ரோகித் ஷர்மா பேச்சு!

Thu Sep 19 , 2024
Nowadays retirement is a joke. Rohit Sharma, who has said goodbye to T20, made a shocking statement, said this on taking a U-turn

You May Like