தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைகழகத்தில் 6 சிறப்பு பாடப்பிரிவுகளுடன் 4 ஆண்டு ஒருங்கிணைந்த B.Ed பட்டப்படிப்பு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்ட அறிவிப்பில்; பல்கலைக்கழகம் தங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பி.எஸ்சி.பி.எட் /பி.ஏ.பி.எட் சேர்க்கைக்கான “மாதிரி விண்ணப்பபடிவத்தின் நகலை” ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு படிவம் வழங்கவும். முதலில் மாதிரிப்படிவத்தில் கேட்கப்பட்டுள்ள, அனைத்து விவரங்களையும் மாணவர்களால் சரியாகப் பூர்த்தி செய்து, அவர்களின் கையொப்பம் பெற வேண்டும்.
விண்ணப்பத்தில் நிரப்பப்பட்டுள்ள மாணவர் விவரங்களை அவரின் கல்விச் சான்றிதழ்களுடன் கல்லூரியின் முதல்வர் ஒப்பிட்டு, சரிபார்த்து உறுதி செய்யவேண்டும். அடுத்து விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்வதற்கு முன்னர், ஒவ்வொரு மாணவரின் சேர்க்கைக்குத் தகுதியான சான்றிதழ் (+2 Mark Statement, Community, TC), கல்லூரி சீருடையில் எடுக்கப்பட்ட மாணவரின் (Passport Size Photo) ஒளிப்படம் மற்றும் கையொப்பங்களைத் (Signature) தனித்தனியே ஸ்கேன் செய்து “Jpeg/Jpg/Png” பைல்களாகத் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
மாணவர்கள் தங்களிடம் சமர்ப்பித்த பூர்த்தி செய்த Eligibility விண்ணப்பப் படிவத்தை சரிபார்த்து, கல்லூரிக்கு வழங்கப்பட்ட User Id-யுடன் (College Mail Id) இரகசிய குறியீட்டை (Password) பயன்படுத்தி www.fteu.ac.in என்ற இணையதளத்தில் உள்ள Online B.Sc.B.Ed. /B.A.B.Ed. admission entry for the academic year 2023-2024 link-ல் பதிவேற்றம் செய்யவும். மாணவர்களின் பெயர்களைத் தமிழில் பதிவுசெய்ய, தமிழ் எழுத்துவடிவம் (Bamini Tamil Font) விசைப்பலகையின் மாதிரி வடிவத்தினை (Keyboard Layout) பதிவிறக்கம் செய்து கொண்டு பயன்படுத்தி கொள்ளவும்,
மாணவர்களின் சாதி (Community Certificate) விவரங்களை பதிவேற்றம் செய்யவும். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப் பல்கலைக்கழகத்திற்கு செலுத்த வேண்டிய தகுதி கட்டணத்தை பல்கலைக்கழக இணையத்தளத்தில் கொடுக்கபட்டு Online B.Sc.B.Ed./B.A.B.Ed. 2023-2024 (1 Year) Eligibility fess payment link-ல் 25.08.2023 தேதிக்குள் செலுத்தவும். மாணவர்களின் பெயர், பாலினம், பிறந்ததேதி, சாதியின் உட்பிரிவு. email-id, கைபேசிஎண், தாய் தந்தையின் பெயர், விலாசம் மாவட்டம் மற்றும் பின்கோடுடன் சமர்ப்பிக்க வேண்டும்.