Hardik Pandya: ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியாவை விடுவிக்குமாறு இந்திய அணியின் முன்னணி வீரர் அஜய் ஜடேஜா கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) முதன்மையான ஆல்ரவுண்டர்களில் பாண்டியாவும் ஒருவர். அவர் தனது ஐபிஎல் வாழ்க்கையை மும்பை இந்தியன்ஸுடன் தொடங்கினார், வெள்ளை-பந்து கிரிக்கெட்டில் அவரது திறமையால் உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர்களில் ஒருவராக உருவெடுத்தார். ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியாவை விடுவிக்குமாறு இந்திய அணியின் முன்னணி வீரர் அஜய் ஜடேஜா கேட்டுக் கொண்டுள்ளார்.
ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் ஆர்டிஎம் முறையை மீண்டும் கொண்டு வந்திருக்கிறது. இந்த முறையில் நாம் எந்த வீரரை வெளியில் நம் அணியில் இருந்து விடுகிறோமோ, அந்த வீரரை மீண்டும் ஏலத்தில் மற்ற அணிகள் வாங்கி வைக்கும் பொழுது அவர்களிடமிருந்து நாம் வாங்கிக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஒரு அணி ஐந்து வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம். முதல் மற்றும் நான்காவதாக தக்க வைக்கும் வீரருக்கு 18 கோடியும், இரண்டு மற்றும் மூன்றாவதாக தக்கவைக்கும் வீரர்களுக்கு 14 கோடியும் கொடுக்க வேண்டும். மேலும் ஒரு அன் கேப்டு வீரரை வைத்துக் கொள்ளலாம். இவருக்கு நான்கு கோடி கொடுக்க வேண்டும்.
இந்தநிலையில், இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா, சூரியகுமார் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா மூவருமே தக்கவைக்கப்படும் இடத்தில் மிக முக்கியமானவர்களாக இருக்கிறார்கள். இதற்கு அடுத்து நான்காவதாக ஒரு வீரரை தக்க வைத்தால் அவருக்கு 18 கோடி கொடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஹர்திக் பாண்டியாவை நான்காவது வீரராக வைத்தால் அவருக்கு 18 கோடி கொடுக்க வேண்டும்.
இந்த நிலையில் இது குறித்து அஜய் ஜடேஜா கூறும்பொழுது “ரோகித் சர்மா பும்ரா மற்றும் சூரியகுமார் யாதவ் மூவரும் சந்தேகத்திற்கு இடமின்றி மும்பை இந்தியன்ஸ் அணியால் தக்கவைக்கப்படுவார்கள். இந்த மூன்று வீரர்களையும் ஏலத்தில் விடும் பொழுது திரும்பி வாங்குவது மிகவும் கடினமானதாக இருக்கும். எனவே ஹர்திக் பாண்டியாவை ஏலத்தில் விட்டு ஆர்டிஎம் மூலம் வாங்க முயற்சி செய்யலாம்”
“ஹர்திக் பாண்டியாவும் ஏலத்தில் விட்டால் வாங்குவதற்கு கடினமான வீரர்தான். ஆனால் காயம் ஒரு பிரச்சினையாக இருந்து வருகிறது. எனவே இதன் காரணத்தால் மற்ற அணி உரிமையாளர்கள் பெரிய பணத்தை கொடுத்து ஹர்திக் பாண்டியாவை வாங்க தயக்கம் காட்டுவார்கள்” என்று கூறியிருக்கிறார்.
Readmore: காகம் அடிக்கடி உங்கள் வீட்டின் அருகில் கத்துகிறதா…! நல்லதா, கெட்டதா..!