fbpx

ஆண்டுக்கு ஆண்டு மாறும் ஐபிஎல் பரிசுத் தொகை!! இந்தாண்டு எவ்வளவு தெரியுமா?

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படவுள்ள தொகை குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனின் இறுதிப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது. இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இறுதிப் போட்டியில் வெற்றிப்பெறும் அணிக்கு எவ்வளவு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது 2ஆம் 3ஆம் இடம் பிடிக்கும் அணிகளுக்கு எவ்வளவு வழங்கப்படும் என்பதை விரிவாக பார்க்கலாம்.

படிப்படியாக ஐபிஎல் மீதான எதிர்பார்ப்பு:

கடந்த 2008ஆம் ஆண்டுதான் ஐபிஎல் சீசன் முதன்முதலாக அறிமுகம் செய்யப்பட்டது. ஐபில் ஆரம்பித்த முதல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது. முதல் 2 சீசன்களாக வெற்றி பெற்ற அணிக்கு ரூ. 4.8 கோடியும், 2ஆவது இடம் பிடித்த அணிக்கு ரூ.2.4 கோடியும் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.

அதன் பிறகு படிப்படியாக ஐபிஎல் மீதான எதிர்பார்ப்பு எகிறியது.மேலும் ஸ்பான்ஸர்கள் காரணமாக பரிசுத் தொகையும் அதிகமாக வழங்கப்பட்டது. உள்ளூர் முதல் உலகளவில் ஐபிஎல் போட்டிக்கான முக்கியத்துவம் உயர ஆரம்பித்தது. அந்த வகையில், கடந்த 15 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு கடந்த 2023ஆம் ஆண்டில் வெற்றி பெற்ற அணிக்கு ரூ.20 கோடியும், 2ஆவது இடம் பிடித்த அணிக்கு ரூ.13 கோடியும் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. மேலும், 3ஆவது இடம் பிடித்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரூ.7 கோடியும், 4ஆவது இடம் பிடித்த லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு ரூ.6.5 கோடியும் பரிசாக வழங்கப்பட்டது.

மேலும் கடந்த 2023ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான தொகை மொத்தமாக ரூ.46.50 கோடி என்று அறிவிக்கப்பட்டது. இனிவரும் காலங்களில் ஸ்பான்ஸர்கள், ஐபிஎல் மீதான எதிர்பார்ப்பு காரணமாக கூடுதலாக வழங்கப்படும் என்று பிசிசிஐ முடிவெடுத்தது. இதில், அதிக ரன்கள் எடுத்தவர்கள் (ஆரஞ்சு கேப்), அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்களுக்கு (பர்பிள் கேப்) தலா ரூ.15 லட்சமும், வளர்ந்து வரும் வீரருக்கான விருதுக்கு ரூ.20 லட்சமும், மதிப்புமிக்க வீரருக்கான விருதுக்கு ரூ.12 லட்சமும், சூப்பர் ஸ்டிரைக்கர் விருதுக்கு ரூ.15 லட்சமும், கேம் சேஞ்சர் விருதுக்கு ரூ.12 லட்சமும் வழங்கப்பட்டது.

நடப்பு சாம்பியன் சிஎஸ்கே:

நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரூ.20 கோடியும், 2ஆம் இடம் பிடித்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ரூ.13 கோடியும் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இந்த தொகைதான் இன்று நடைபெறும் பைனல் மேட்ச்சில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி வெற்றி பெறும் அணிக்கு ரூ.20 கோடியும், 2ஆவது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.13 கோடியும் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More: சென்னையில் ரூ.200 கோடி முதலீடு செய்யும் ஜெர்மனி நிறுவனம்..!! என்ன பிளான்?

Rupa

Next Post

SRH Vs KKR: யாருக்கு கைக்கொடுக்கப்போகிறது சேப்பாக்கம் மைதானம்?

Sun May 26 , 2024
2024 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்றிரவு நடைபெறுகிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.சேப்பாக்கம் மைதானத்தில் ஏற்கெனவே கொல்கத்தாவும், ஹைதராபாத்தும் மோதிய போட்டியில், கொல்கத்தா அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத்தை வீழ்த்தியுள்ளது.இது ஒருபுறம் இருக்க இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் சேப்பாக்கம் மைதானம் எந்த அணிக்கு கைக்கொடுக்க போகிறது என்பதை குறித்து விரிவாக பார்க்கலாம். சென்னை சேப்பாக்கம் […]

You May Like