இந்தியன் ரயில்வே கன்ஸ்டிரக்ஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. அந்த அறிவிப்பின்படி இந்தியன் ரயில்வே கன்ஸ்ட்ரக்ஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள இன்ஜினியரிங் பணியிடங்களை நிரப்புவதற்காக தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்துள்ளது. இந்தியன் ரயில்வே கன்ஸ்ட்ரக்ஷன் லிமிடெட் நிறுவனத்தில் இன்ஜினியரிங் பிரிவிற்கு 34 காலியிடங்கள் உள்ளன. இவற்றை நிறப்புவதற்காக தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பி.இ /பி.டெக் பட்டப் படிப்பில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க உச்சபட்ச வயது வரம்பு 35 ஆகும். இந்த வேலை வாய்ப்பிற்கு தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு மாத ஊதியமாக ரூ.36,000/- வரை வழங்கப்படுமென அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 17.04.2023 ஆகும். இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விருப்பமுடையவர்கள் தங்களது விண்ணப்ப படிவத்தினை இந்தியன் ரயில்வே கன்ஸ்ட்ரக்ஷன் லிமிடெட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பதாரர்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்பிற்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் பஞ்சாப், கர்நாடகா, ஹரியானா, ஒடிசா, சென்னை – தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், டெல்லி – புது தில்லி ஆகிய இடங்களில் பணியமர்த்தப்படுவார்கள் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்பினை பற்றிய பிற தகவல்களை அறிய ircon.org என்ற இணையதள முகவரிக்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.