அயர்லாந்து நாட்டைச் சார்ந்த ஒரு நபர் தான வளர்த்த கோழிகளாலையே இறந்த சம்பவம் தற்போது தெரிய வந்து பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. அயர்லாந்து நாட்டைச் சார்ந்த நபர் ஜாஸ்பர் க்ராஸ் இவர் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக அயர்லாந்து நாட்டு காவல்துறை இவரது பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறாய்வு செய்து இறப்பிற்கான காரணம் என்ன என்று தீவிரமாக விசாரித்து வந்தது. தற்போது இந்த விவகாரத்தில் உண்மை தெரிய வந்திருக்கிறது.
அயர்லாந்து நாட்டின் பல்லினஸ்லோ என்ற பகுதியில் வசித்து வந்தவர் ஜஸ்பர் க்ராஸ். 67 வயதான இந்த நபர் தனது வீட்டின் சமையலறையில் அடிபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் மயக்கமாகக் கிடந்தார். முதலுதவி குழுவின் அறிகு சிகிச்சை அளித்தும் இவர் சுயநினைவிற்கு திரும்பாமல் இறந்து போனார். இந்த இறப்பை பற்றிய மர்மம் நீண்ட காலமாக நீடித்து வந்தது. தற்போது இதற்கான காரணம் தெரிய வந்திருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக தற்போது மனம் திறந்துள்ள அவரது மகள் ஜாஸ்பர் தான் வளர்த்த கோழிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவித்திருக்கிறார். கோழிகள் வளர்ப்பில் பிரியமுள்ள ஜாஸ்பர் தன் வீட்டில் ஏராளமான கோழிகளை வளர்த்திருக்கிறார். அவற்றில் ஆக்ரோஷமான சண்டை சேவல்களும் இருந்திருக்கின்றன. அவற்றில் ஒன்று கேஸ்பரை ஆக்ரோசமாக தாக்கியதால் காயமடைந்து ரத்த வெள்ளத்தில் விழுந்து அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக அவரது மகள் தெரிவித்து இருக்கிறார். இதன் மூலம் கடந்த 9 மாதங்களாக நிலவி வந்த மர்மம் விலகி இருக்கிறது.