கோழி முதலில் வந்ததா அல்லது முட்டை முதலில் வந்ததா என்ற விவாதம் பிரபலமானது. அந்த வரிசையில் இப்போது, கோழி ஒரு விலங்கா அல்லது பறவையா?என்ற விவாதம் தொடங்கி, நீதிமன்றத்தை எட்டியுள்ளது.
குஜராத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு மனு, கோழிகளை சட்டப்பூர்வமாக விலங்குகளாகக் கருத வேண்டுமா என்பது குறித்த விசாரணைக்கு வழிவகுத்தது. கோழிகள், அவற்றின் இறக்கைகள் பறவை வகையைச் சேர்ந்தவை என்பது வெளிப்படையாகத் தோன்றினாலும், இந்த மனு புதிய சந்தேகத்தை கிளப்பியது.
2023 ஆம் ஆண்டில், விலங்கு நல அறக்கட்டளை மற்றும் அஹிம்சா மகாசங்கம் ஆகியவை கடைகளில் கோழிகளை வெட்டுவதைத் தடை செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. நீதிபதிகள் என்.வி. அஞ்சாரியா மற்றும் நிரல் மேத்தா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இந்த மனுவை விசாரித்தது. கோழியை விலங்காகக் கருத முடியுமா என்று குஜராத் உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியபோது, மனுதாரர்கள் விலங்குகள் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 2(a) ஐ சுட்டிக்காட்டினர்,
இறைச்சி கடைகளில் உயிருள்ள விலங்குகள் இருப்பதைத் தடை செய்யும் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைச் சட்டம், 2006ஐயும் மனுதாரர்கள் குறிப்பிட்டனர். நீதிபதிகள் என்.வி. அஞ்சாரியா மற்றும் நிரல் மேத்தா ஆகியோர் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதன் போது கோழி என்பது பறவையினமா அல்லது விலங்கினமா என்ற கேள்வியை நீதிமன்றம் எழுப்பியது. நீதிமன்றத்திற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர் மனிஷா லவ்குமார், உணவு மற்றும் பாதுகாப்பு தரநிலைகளின்படி, கோழி ஒரு பறவை அல்ல, ஒரு விலங்கு என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது என்று தெளிவுபடுத்தினார்.
அறிவியல் என்ன சொல்கிறது?
அறிவியல் பார்வையில் இருந்து நாம் புரிந்து கொண்டால், சேவல் என்பது ஒரு விலங்கு மற்றும் பறவை இரண்டுமே ஆகும். கோழிகள் “அனிமாலியா” என்ற விலங்கு இராச்சியத்தில் வகைப்படுத்தப்படுகின்றன, இதில் தாவரங்கள், பூஞ்சைகள் மற்றும் பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் தவிர அனைத்து உயிரினங்களும் அடங்கும். எனவே அதை ஒரு விலங்காகக் கருதலாம்.
அறிவியலில், கோழிகள் ”அவ்ஸ்” பிரிவில் வைக்கப்படுகின்றன. இறக்கைகள் கொண்ட மற்றும் முட்டையிடும் பறவைகள் இந்த வகையைச் சேர்ந்தவை. இந்த வழியில், சேவல் பறவை வகைக்குள் வருகிறது. எளிமையான மொழியில் நாம் புரிந்து கொண்டால், அதை நிச்சயமாக ஒரு வகை விலங்கு என்று அழைக்கலாம்.