fbpx

பாதாம் சாப்பிடுவது, பாலியல் உறவுக்கு, நல்லதா, கெட்டதா….?

நம்முடைய உடலுக்கு நால்வரும் பல்வேறு சத்துக்களை வழங்கும் பல உணவுகளை பற்றி நாம் கேள்விப்படுவோம், ஆனால், அதனை வாங்கி சாப்பிடுவதற்கான காசும் சரி, நேரமும் சரி நமக்கு இருக்காது. ஏனென்றால், இன்றைய காலகட்டத்தில், அனைவரும் பரபரப்பாக அவரவர் வேலையை பார்ப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது.

அந்த வகையில், இன்று நம்முடைய உடலுக்கு பல்வேறு சத்துக்களையும் வழங்கும் பாதாம் பருப்பில் இருக்கக்கூடிய மகத்துவத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம். இந்த பாதாமை நாம் நாள்தோறும் சாப்பிட்டு வருவதால், மூளையின் யோசிக்கும் திறன் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. உடலில் உள்ள திசுக்களை வலுவாகவும், அதோடு நம்முடைய சருமத்தை இளமையுடனும் வைத்திருக்க இந்த பாதாம் உதவி புரிகிறது.

பாதாமை அப்படியே சாப்பிடுவதை விடவும், தண்ணீரில் நன்றாக ஊற வைத்த பிறகு அதன் தோலை நீக்கிவிட்டு, சாப்பிடுவது உங்களுக்கு கூடுதல் நன்மைகளை வழங்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த முறை ஆயுர்வேதத்தில் கடைபிடிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. இந்த பாதாமில் துத்தநாகம், கால்சியம், விட்டமின் ஈ, மெக்னீசியம், ஒமேகா 3 போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன.

இந்த பாதாமின் தோல், சாப்பிட்ட பிறகு, ஜீரணமாக சற்றே கடினமாக இருக்கும். அதோடு அதனை அப்படியே சாப்பிடுவதால், இரத்தத்தில், பித்த அளவை அதிகரிக்கும். தினந்தோறும் பாதாமை சாப்பிடுவதால், செரிமான பிரச்சனைகள் நீங்கி, உடல் எடையை குறைப்பதற்கும் இது உதவியாக உள்ளது.

ஆனால், இந்த பாதாமில் இருக்கக்கூடிய சத்துக்கள் அனைத்தும், முழுமையாக நமக்கு கிடைக்க வேண்டும். என்றால் அதனை வெதுவெதுப்பான வெந்நீரில் இரவு சமயத்திலேயே நன்றாக ஊற வைத்து, காலை எழுந்தவுடன் அதன் தோலை நன்றாக நீக்கிவிட்டு, அதன் பின்னர் சாப்பிட வேண்டும் நாள்தோறும் 10 பாதாமை ஊற வைத்து நாம் சாப்பிட்டு வருவதன் மூலமாக, நம்முடைய உடலுக்கு பல்வேறு சத்துக்கள் கிடைக்கும். அதோடு, இந்த பாதாம் பாலியல் உறவுக்கும் நன்மை பயக்கும் என்று சொல்லப்படுகிறது.

Next Post

வெளிநாடுகளில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு நிதி உதவி...! ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்பு...!

Thu Sep 28 , 2023
வெளிநாடுகளில் சென்று படிக்க விரும்பும் மாணவர்கள் நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்கள் தாட்கோ மூலமாக வழங்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் அயல் நாடு சென்று புகழ் பெற்ற பல்கலைக் கழகங்களில் உயர் […]

You May Like